பஷிலின் அழைப்பை நிராகரித்தார் பீரிஸ்

Published By: Digital Desk 3

19 Aug, 2022 | 02:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அதன் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் அழைப்பை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நிராகரித்துள்ளார். தனது தரப்பினருடன் கலந்தாலோசித்து பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இருப்பினும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பிரதிவாதி வேட்பாளரான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்கினார்.

அத்துடன் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திற்கும் அவர் எதிராக வாக்களித்தார்.

இவ்வாறான காரணிகளினால் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜி.எல் பீரிஸிற்கு கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும்,கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்குமாறும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்துமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து கட்சியின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உட்பட முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடவேஹா, சன்ன ஜயசுமன, டிலான் பெரேரா உட்பட பொதுஜன பெரமுனவின் 10 பின்வரிசை உறுப்பினர்கள் பொதுஜ ன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தனித்து அரசியல் ரீதியில் தனித்து செயற்படும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஜி.எல் நிராகரித்து தனது தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை அறிவிப்பதாக பஷில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44