அழிந்­து­போன தாஸ்­மே­னிய புலி இனத்தை மீண்டும் உயிர்ப்­பிக்க விஞ்­ஞா­னிகள் உறுதி

Published By: Vishnu

19 Aug, 2022 | 12:04 PM
image

சுமார் 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அழிந்­து­போன தாஸ்­மே­னிய புலி இனத்தை மீண்டும் உரு­வாக்­கு­வற்கு விஞ்­ஞா­னிகள் உறு­தி­பூண்­டுள்­ளனர்.

தைலசைன் என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக குறிப்­பி­டும தாஸ்­மே­னிய புலிகள், 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா தீவைத் தவிர்ந்த உலகின் ஏனைய பகு­தி­க­ளி­லி­ருந்து மறைந்­தன.

1800களில் தாஸ்­மே­னி­யாவில் குடி­யே­றிய ஐரோப்­பி­யர்கள், தாஸ்­மே­னிய புலி­களால் தமது கால்­ந­டை­களை இழந்­தனர். இதனால், தாஸ்­மே­னியப் புலி­களை அவர்கள் தீவி­ர­மாக வேட்­டை­யா­டினர். அந்த இனமே அழிந்து போகும் அள­வுக்கு இந்த வேட்டை தொடர்ந்­தது.

பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்த தாஸ்­மே­னிய புலி­களில் பெஞ்­சமின் என பெய­ரி­டப்­பட்ட புலி இறு­தி­யாக எஞ்­சி­யி­ருந்­தது. தாஸ்­மே­னி­யாவின் ஹோபார்ட் நக­ரி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லை­யொன்றில் வசித்த இந்த தாஸ்­மே­னிய புலி 1936 ஆம் ஆண்டு இறந்­தது. 

தாஸ்­மே­னிய புலி இன­மா­னது பாது­காக்­கப்­பட வேண்­டிய இன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு சிறிது காலத்தில் பெஞ்­சமின் இறந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது, உல­கி­லி­ருந்து மறைந்­து­விட்டு தாஸ்­மே­னிய புலி இனத்­துக்கு உயி­ரூட்­டு­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் உறு­தி­பூண்­டுள்­ளனர். 

இப்­புலி இனத்தின் எஞ்­சி­யுள்ள மர­பணு மாதி­ரி­களைப் பயன்­ப­டுத்தி, செயற்கை இனப்­பெ­ருக்க முறையில் இப்­புலி இனத்தை மீண்டும் உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. 

கொலோசால் பயோ­சயன்ஸ் எனும் நிறு­வ­னத்தின் இணை ஸ்தாப­கர்­க­ளான தொழி­ல­திபர் பென் லாம், உலகப் புகழ்­பெற்ற மர­பணு விஞ்­ஞா­னி­யான கலா­நிதி ஜோர்ச் சேர்ச், தாஸ்­மே­னிய புலிகள் தொடர்­பான நிபுணர் கலா­நிதி அண்ட்ரூ பாஸ்க் முத­லானோர் இணைந்து இதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

செயற்கை கருப்பை உருவாக்கம் உட்பட பல சிக்கலான படிமுறைகளை இத்திட்டம் கொண்டுள்ளது. சுமார் 15 மில்லியன் டொலர் செலவில் இத்திட் டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17