கணிதத் திறமையால் பல தடவைகள் பல மில்லியன் டொலர்களை வென்ற நபர் : தம்பதியினரின் கதை திரைப்படமாகியது

Published By: Vishnu

19 Aug, 2022 | 12:03 PM
image

லொத்தர் சீட்­டி­ழுப்­பு­களில் கணிதத் திற­மை­களைப் பயன்­ப­டுத்தி பல மில்­லியன் டொலர்­களை வென்ற ஒரு தம்­ப­தி­யினர் தொடர்­பான ஜெரி அன்ட் மார்கி கோ லார்ஜ் (Jerry and Marge Go Large) எனும் திரைப்­படம் அண்­மையில் வெளி­யாகி வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

இத்­தி­ரைப்­படம் அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தைச் சேர்ந்த ஜெரி செல்பீ, மார்கி செல்பீ தம்­ப­தி­யி­னரின் வாழ்க்கை தொடர்­பான உண்­மையைக் கதையைத் தழு­வி­ய­தாகும். 

நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராக பணி­யாற்­றியர் ஜெரி செல்பீ. அவரும் அவரின் மனைவி மார்­கியும் மிச்­சி­க­னி­லு­கள்ள கிரா­ம­மொன்றில் கடை­யொன்­றை­யும நடத்தி வந்­தனர். 2003 ஆம் ஆண்டு 60 வயதைக் கடந்த நிலையில், ஜெரி செல்பீ ஓய்வு பெற்­ற­வுடன் தமது கடை­யையும் இவர்கள் விற்­று­விட்­டனர்.

சிறிது காலத்தின் பின்னர் மேற்­படி கடையை பார்த்­து­விட்டு வரு­வ­தற்­காக ஜெரி செல்பீ சென்­றி­ருந்தார் அப்­போது 'வின்பால்' எனும் புதிய லொத்தர் விளை­யாட்டு நடை­பெ­று­வதை அவர் கண்டார். ரோல்­டவுண் எனும் அம்சம் அதில் அடங்­கி­யி­ருப்­ப­தையும் அப்­போது 64 வய­தா­ன­வ­ராக இருந்த ஜெரி செல்பீ அவ­தா­னித்தார்.

அதா­வது, சில லொத்தர் சீட்­டிழுப்­பு­களில் ஜெக்பொட் பரிசு வெல்­லப்­ப­டா­விட்டால் அடுத்த தட­வை­களில் ஜெக்பொட் பரிசுத் தொகை அதி­க­ரித்­துக்­கொண்டே செல்லும். 

ஆனால், மிச்­சிகன் மாநி­லத்தின் வின்பால் லொத்­தரில், எவ­ரேனும் ஒருவர் ஆறு எண்­க­ளையும் அடிக்கும் வரை, அதா­வது ஜெக்பொட் வெல்லும் வ‍ைர பரிசுத் தொகை கூடிக் கொண்டே இருக்கும். எனினும் அத்­தொகை ஐந்து மில்­லியன் டொலர்­களை எட்டும் போது, 6 எண்­களை யாரும் பொருத்­த­வில்லை என்றால், அதற்கு கீழ் நிலை­க­ளி­லுள்ள வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு அதாவது ஐந்து அல்­லது நான்கு அல்­லது மூன்று எண்கள் பொருத்­திய நபர்­க­ளுக்கு லொத்தர் பரிசுப் பணம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும். இது ரோல்டவுண் முறை எனக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

குறித்த வாரத சீட்­டி­ழுப்பில் ரோல் டவுண் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் லொத்தர் ஏற்­பாட்­டா­ளர்கள் அது குறித்து அறி­விப்புச் செய்வர்.

கணி­தத்தில் இள­மானி பட்டம் பெற்­றி­ருந்த ஜெரி செல்பி, கணி­தத்தில் மிகத் தேர்ச்­சி­யு­டை­ய­வ­ராக விளங்­கினார். தனது கணிதத் திற­மையைப் பயன்­ப­டுத்தி, இந்த லொத்­தர்­களில் வெல்ல முடியும் என நம்­பினார்.

தனது கணிதத் திற­மையைப் பயன்­ப­டுத்தி 2 மாநி­லங்­களில் மொத்தம் 26.85 மில்­லியன் டொலர்­களை ஜெரி செல்பி வென்­றெ­டுத்தார். 

இதற்­காக பல மில்­லியன் டொலர் செலவில் லொத்தர் சீட்­டு­க­ளையும் ஜெரி செல்பி மற்றும் மார்கி செல்பி ஜோடி­யினர் வாங்­கினர்

ஆரம்­பத்தில், ஒரு வார குலுக்­க­லுக்­கு­ரிய லொத்­தரில் எவ்­வ­ளவு தொகை செல­விட்டால் எவ்­வ­ளவு பரிசுப் பணம் என ஆராய்­வ­தற்கு கணக்­கு­களைப் போட்டார் ஜெரி செல்பீ.

இதன்­படி, டிக்­கெட்­டு­க­ளுக்கு, 1,100 டொலர்­களை செல­விட்டால் 4 இலக்­கங்கள் சரி­யாகப் பொருந்தும் வெற்­றி­யா­ளர்­களில் ஒரு­வ­ரா­கவும் (இதற்கு 1,000 டொலர் பரிசு கிடைக்கும்) 3 இலக்­கங்கள் பொருந்தும் 3 வெற்­றி­யா­ளர்­க­ளா­கவும் (இவற்­றுக்கு மொத்தம் 900 டொலர்கள் கிடைக்கும்) தான் விளங்­கு­வ­தற்கு சாத்­தி­ய­முள்­ளது என அவர் கணக்­கிட்டார். அதா­வது 1,100 டொலர்­களை செவிட்டால் 1,900 டொலர்கள் பரிசு கிடைக்கும். இதன்­படி 800 டொலர் லாபம் கிடைக்­கலாம்.

இது தொடர்­பாக தற்­போது 83 வய­தான ஜெரி  செல்பீ அளித்த செவ்­வி­யொன்றில், முதல் தடவை தான் 2,200 டொலர்­களை டிக்­கெட்­டு­களில் செல­விட்­ட­தா­கவும், அத்­த­டவை 50 டொலர்­களை தான் இழந்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

லொத்­தரில் ஆயி­ரக்­க­ணக்­கான டொலர்­களை செல­விடப் போவதை தனது மனைவி மார்­கி­யிடம் உட­ன­டி­யாக ஜெரி செல்பீ கூறி­வி­ட­வில்லை.

இரண்­டா­வது தடவை ரோல்­டவுண் அறி­விக்­கப்­பட்­ட­போது, 3,600 டொலர்­க­ளுக்கு லொத்தர் டிக்­கெட்­டு­களை வாங்­கினார் அத்­த­டவை அவ­ருக்கு 6,300 டொலர்கள் பரி­சு­க­ளாக கிடைத்­தன. அதன்பின் 8,000 டொலர்­களை செல­விட்டார். சுமார் இரு மடங்கு பணம் அவ­ருக்கு கிடைத்­தது.

அப்­போ­துதான் தனது சேமிப்புப் பணத்தை வைத்து தான் செய்து கொண்­டி­ருப்­பது என்ன என்­பதை தனது மனை­வி­யிடம் கூறு­வ­தற்கு அது சரி­யான தருணம் என தீர்­மா­னித்­த­தாக ஜெரி கூறு­கிறார்.

மிச்­சிகன் மாநி­லத்தின் வின்பால் லொத்­தரில் ஜெரி, மார்கி தம்­ப­தி­யினர் இவ்­வாறு 12 தட­வைகள் பணத்தைக் கொட்டி, 26.5 லட்சம் டொலர்­களை பரி­சாக பெற்­றனர். இதற்­காக அவர்கள் 18 லட்சம் டொலர்­களை செல­விட்­டி­ருந்­தனர்.

2005 ஆம் ஆண்டு மிச்­சிகன் வின்பால் லொத்தர், அதிக விற்­ப­னை­யின்மை கார­ண­மாக மூடப்­பட்­டது. 

எனினும் இத்­தம்­ப­தி­யினர் ஓய்ந்­து­வி­ட­வில்லை. அரு­கி­லுள்ள மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில், இது போன்ற லொத்தர் கேஷ் வின்பால் எனும் பெயரில் விற்­ப­னை­யா­கு­வதை அறிந்த அவர்கள், சுமார் 900 மைல்கள் பயணம் செய்து அந்த லொத்தர் விளை­யாட்­டிலும் ஈடு­பட்­டனர்.  மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் 43 தட­வைகள் இந்த லொத்தர் விளை­யாட்டில் ஈடு­பட்டு 2.42 கோடி டொலர்­க­ளுக்கும் அதிகமான பணத்தை வென்­றனர். இதற்­காக 1.73 கோடி டொலர்­களை அவர்கள் செல­விட்­டி­ருந்­தனர். 

 2012 ஆம் ஆண்டு மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கே வின்பால் லொத்தர் மூடப்படும் வரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்தது. 

அதிக டிக்கெட்களை வாங்குவதற்காக மேலும் பலரை கூட்டுச் சேர்த்து கொண்டார் ஜெரி செல்பீ.. இதற்கான தனி நிறுவனமொன்றையும் அவர் ஆரம்பித்தார். வருடாந்தம் 7 தடவைகள் லொத்தர்களை அவர்கள் குறிவைத்தனர். 

ஒரு தடவைக்கு 6 லட்சம் டொலர்களை செலவிட்டனர். அதாவது வருடாந்தம் 42  லட்சம் டொலர்களை செலவிட்டனர்.

‍‍‍ெமாத்தம் 55 தட­வை­களில் 3 தட­வைகள் மாத்­திரம் இவர்கள் தோல்­வி­யுற்­றாக கூறப்­ப­டு­கி­றது.

சில வாரங்­களில் ஜெரியும், மார்­கியும் கடை­க­ளுக்குச் சென்று லட்­சக்­க­ணக்­கான எண்­ணிக்­கையில் லொத்தர் டிக்­கெட்­டு­களை வாங்­கு­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்­தனர்.

இவர்கள் அதிக எண்­ணிக்­கை­யான டிக்­கெட்­டு­களை வாங்­கு­வது அரச அதி­கா­ரி­களின் விசா­ர­ணை­க­ளுக்கும் வழி வகுத்­தது,

மசா­சூசெட்ஸ் மாநி­லத்தின் சில இடங்­களில் அதிக எண்­ணிக்­கையில் கேஷ் வின்பால் டிக்­கெட்­டுகள் விற்­ப­னை­யா­கு­வ­தாக பொஸ்டன் குளோப் பத்­தி­ரி­கைக்கு 2011 ஆம் ஆண்டு தகவல் கிடைத்­தி­ருந்­தது.  சிலர் பெரும் எண்­ணிக்­கை­யான டிக்­கெட்­களை வாங்­குது  தொடர்­பாக அப்­பத்­தி­ரிகை விசா­ரித்­த­போது, மிச்­சிகன் மாநி­லத்தைச் சேர்ந்த ஜெரி செல்பீ குழுவும் மசா­சூசெட்ஸ் பல்­க­லைக்­க­ழக கணி­த­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்றும் இதில் ஆதிக்கம் செலுத்­து­வது தெரி­ய­வந்­தது. 

அச்­செய்தி மசா­சூசெட்ஸ் மாநில அரச அதி­கா­ரி­களின் கவ­னத்தை ஈர்த்­தது. இந்த லொத்­தரில் ஏதேனும் மோசடி நடக்­கி­றதா என்­பது குறித்து அவர்கள் ஆராய்ந்­தனர். மாநில பொலிஸ் மா அதிபர் கிறேக் சுலீவன் தலை­மையில் விசா­ரணை நடை­பெற்­றது. 

பல நபர்­க­ளிடம் விசா­ரணை நடத்தி, பல ஆவ­ணங்­களை ஆராய்ந்த பின், ஜெரி செல்பீ குழு­வி­னரும் மசா­சூசெட்ஸ் பல்­க­லைக்­க­ழக குழு­வி­னரும் சட்­ட­வி­ரோ­த­மாக எதுவும் செய்­ய­வில்லை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

மசா­சூசெட்ஸ் பல்­க­லைக்­க­ழக குழுவில் பொஸ்டன் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் நோர்த்­ஈஸ்டர்ன் பல்­க­லைக்­கழகம் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களும் இடம்­பெற்­றி­ருந்­தமை பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தது.

இதே­வேளை தாம் வாங்கி, பரிசு கிடைக்­காத லொத்தர் சீட்­டு­க­ளையும் கணக்­காய்­வு­க­ளுக்­காக செல்பீ தம்­ப­தி­யினர் சேக­ரித்து வைத்­தி­ருந்­தனர். 1.8 கோடி டொலர் பெறு­ம­தி­யான இத்­த­கைய லொத்தர் சீட்­டுகள்  60 இற்கும் அதி­க­மான பிளாஸ்டிக் கொள்­க­லன்­களில் இவர்கள் சேக­ரித்து வைத்­தி­ருந்­தனர்.

2012 ஆம் ஆண்டு கேஷ் வின்பால் லொத்தர் மூடப்­படு;வரை இவர்­களின் லொத்தர் வேட்டை தொடர்ந்­தது. தற்­போதும் எப்­போ­தா­வது லொத்­தர சீட்­டு­களை வாங்­கு­வ­தாக ஜெரி செல்பீ கூறு­கிறார்.

இவர்­களின் கதையை விளக்கும் ஜெரி அன்ட் மார்கி கோ லார்ஜ் திரைப்படத்தில் ஜெரி செல்பீயின் பாத்திரத்தில் பிறையன் கிரான்ஸ்டன் நடித்துள்ளார். மார்கி செல்பீயின் பாத்திரத்தில் அனட் பெனின் நடித்துள்ளார்.  இப்படத்தை டேவிட் பிரான்கெல் இயக்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right