வெஜ் இட்லி

Published By: Digital Desk 7

19 Aug, 2022 | 11:53 AM
image

தேவையான பொருட்கள்

இட்லி மா - 3 கப்

கெரட் - 2

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தக்கரண்டி

தக்காளி - 2

உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை

 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கெரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அதன் பின்னர் கெரட் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொண்டு அதில் இந்த வதக்கிய கலவையை சேர்த்து நன்கு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான வெஜ் இட்லி தயார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்