மக்களிடம் இதுநாள் வரையில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள், செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.

நாட்டில் பெருகி வரும் கருப்புப் பணத்தை, ஒழிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒருபுறம் ஆதரவும், ஒருபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பழைய ரூபாய் தாள்களை, வங்கியில் செலுத்தி புதிய ரூபாய்  தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மோடியின் அடுத்த அதிரடி தங்கம் பதுக்குபவர்கள் மற்றும் கருப்புப் பணத்தை நிலமாக மாற்றி வைத்திருப்பவர்களை குறி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, மோடி தற்போது அறிவித்திருக்கும் திட்டம், வெறும் ரூபாய் தாள்களாக பதுக்கி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், கருப்புப் பணத்தை தங்கமாகவோ அல்லது நிலங்களாகவோ மாற்றி வைத்திருப்பவர்களை ஒன்றும் செய்யாது. ஏனெனில், இந்தியாவில் ஏராளமனோர் தங்களின் கருப்புப் பணத்தை தங்கம் மற்றும் நிலங்களைல் முதலீடு செய்து உள்ளனர். 

எனவே அவற்றை தடுக்கும் பொருட்டு, மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம் இதுதான்,

தங்கத்தை சேமித்து வைத்திருப்பவர்கள், அதனை முறையாக வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, தங்களின் ஆதார் எண்ணில் இணைத்து அதன் பின் அந்த தங்கத்தை பயன்படுத்தலாம். 

நகையாக அல்லாமல் தங்க கட்டியாகவும் மற்றும் தங்க காசுகளாகாவும் வைத்திருப்பவர்கள், அதை வங்கியில் இருப்பு வைத்து ஆதார் எண்ணோடு இணைத்து, ஈட்டுறுதிப் பத்திரமாக மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். 

இனிமேல் தங்கம் வாங்குபவர்களின் ஆதார் எண்ணை கண்டிப்பாக பெற வேண்டும். இல்லையேல் நகைக்கடை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கருப்புப் பணத்தை பதுக்குவது முடியாமல் போகும். முக்கியமாக தங்கத்தின் விலை 70 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும். 

அதேபோல், நில உடைமைதாரர் உரிமை புதுப்பிப்புத் திட்டம் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, நிலப்பத்திரங்கள் அனைத்தையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமர்பித்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதன் மூலம் நில மோசடி செய்வதும், பினாமியாக சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும்.

அதேபோல் வாகனம் உரிமை மீள்பதிவு திட்டம், அந்நிய பொருள் பண்டமாற்றுத் திட்டம் மற்றும் இந்திய நுண்ணோக்கு பாதுகாப்புத் திட்டம் என பல திட்டங்களை மத்திய அரசு அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.