ஜோர்தானிய முடிக்குரிய இளவரசருக்கு சவூதி செல்வந்தரின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம்

Published By: Vishnu

18 Aug, 2022 | 09:38 PM
image

ஜோர்தானிய முடிக்குரிய இளவரசர் ஹஸைன் சவூதி அரேபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்  செல்வந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரது மகளுமான ரஜ்வா அல் சாயிப்பை  திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். 

சவூதி அரேபிய றியாத் நகரிலுள்ள மணமகளின் இல்லத்தில் விமரிசையாக 17 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் 18 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியாகியுள்ளன.

முடிக்குரிய இளவரசரின் தங்கை இளவரசி இமானின் (25 வயது) திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்று ஒரு சில வாரங்களிலேயே மேற்படி நிச்சயதார்த்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவர் வெனிசுலா முதலீட்டாளரான ஜமீல் தெர்மியோரிஸை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் முடிக்குரிய இளவரசர் ஹஸைனுக்கும் ரஜ்வாவுக்குமிடையில் காதல் எதுவும் இருந்ததா அல்லது அவர்களது திருமண பந்தம் தொடர்பில் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டதா என்பது அறியப்படவில்லை.

பிரித்தானிய சான்ஹேர்ஸ்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான இளவரசர் ஹஸைனுக்கும் (28 வயது);  ரஜ்வாவுக்குமிடையில் (28 வயது)  இடம்பெற்ற இந்தத் திருமண நிச்சயதார்த்தத்தில்  ஜோர்தான்  மகாராணி ரனியா (51 வயது) மற்றும் அவரது கணவரான மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ் (60 வயது  ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்படி திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பானது  ஜோர்தானிய அரச குடும்பத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் மத்தியில் மேற்படி ஜோடியின் திருமணம் குறித்து  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நியூயோர்க்  நகரிலுள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த ரஜ்வா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  நவநாகரிக வடிவமைப்புத் துறையில்  கற்கைநெறியைப் பூர்த்தி செய்திருந்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள  நிர்மாணக் கலை நிறுவனத்தில் பணியாற்றியதைத் தொடர்ந்து  அவர்  தற்போது சவூதி அரேபியாவிலுள்ள வடிவமைப்பு கூடமான டிஸைன்லப் எக்ஸ்பீரியன்ஸில் பணியாற்றி வருகிறார்.

அதேசமயம் மன்னர் அப்துல்லாஹ் மற்றும் மகாராணி ரனியாவின் 4  பிள்ளைகளில் மூத்தவரான  முடிக்குரிய இளவரசர் ஹ{ஸைன்   2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்  பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்குத் தலைமை தாங்கி அந்தகைய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  வயதில் மிகவும் இளமையானவர் என்ற பெயரைப் பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08