குளவி கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கலஹா - வெலனன் தோட்டத்தைச் சேர்ந்த இருவர், தொழில் நிமித்தம் லெவனனில் இருந்து அதனை அண்மித்ததோட்டம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் இவர்களை குளவி தாக்கியுள்ளது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.