சிறுநீரக கற்கள் பாதிப்பு மீண்டும் தாக்காமல் இருப்பதற்கான உணவு முறை சிகிச்சை

Published By: Digital Desk 4

17 Aug, 2022 | 05:21 PM
image

மேலத்தேய நாடுகளில் உள்ள மக்களில் 10 முதல் 12 சதவீத ஆண்களுக்கும், ஐந்து முதல் ஏழு சதவீத பெண்களுக்கும் சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலத்தேய நாடுகளில் மட்டுமல்லாமல் எம்முடைய தெற்காசிய நாடுகளிலும் சிறுநீரக கல் பாதிப்பு காரணமாக ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசம் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். 

இதற்கு தற்போது உணவு முறை சிகிச்சையின் மூலமாகவும் சிறுநீரக கல் பாதிப்பு மீண்டும் வராமல் தடுக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. சிலருக்கு கடுமையான வலியுடன் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, ஓஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய பாதிப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடியவை. எம்மில் சிலருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் Shock Wave Lithotripsy, Ureteroscopy, Percutanesous Nephroe Lithotomy என மூன்று வகையினதான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டிருப்போம். 

அதே தருணத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை தொடராததன் காரணமாக ஐந்து ஆண்டுகளில் மீண்டும் 30 சதவீத சதவீதத்தினருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

Calcium Stones, Uric Acid Stones, Struvite Stones, Cystine Stones என எந்த வகையினதான சிறுநீரக கல்லாக இருந்தாலும், அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றிக் கொள்வது எளிதானது மட்டுமல்ல பொருத்தமானதும் கூட. சிலருக்கு லேசர் சிகிச்சை மூலமாகவும் சிறுநீரக கல்லை அகற்றிக் கொள்வார்கள்.‌ மேலும் சிறுநீரகக் கல்லை ஒரு முறை அகற்றி விட்டால், மீண்டும் அத்தகைய பாதிப்பு ஏற்படாதிருக்க, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு நாளாந்தம் குடிநீரை அருந்த வேண்டும்.

உடலில் ஏற்படும் நீர் சத்து பற்றாக்குறையின் காரணமாகவே சிறுநீரகத்தில் கல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வேறு சிலருக்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துமிக்க உணவுகளை உணவு முறையாக தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் பாதுகாக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் குரு பாலாஜி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04