ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்து

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 04:09 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் ஸ்திரத்தன்மை, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு எமது அரசாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல வருடங்களாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நீங்கள் இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை எனக்கு உற்சாகமளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுவதையும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறைகள் உங்கள் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் தற்போது நிலவும் நெருக்கடியை விரைவில் சமாளிக்கும் என்று நம்புகின்றேன். நமது இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவையொட்டி, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் ஒன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு உங்களுடன்  இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். '

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38