முட்டை, கோழி இறைச்சி விற்பனையில் கடும் சரிவு

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 03:57 PM
image

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவாகவும்,  சிவப்பு முட்டை ஒன்றின் விற்பனை விலை 68 ரூபாவாகவும் காணப்படுகின்றது. 

கோழித் தீனி மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் விலை 15 ரூபாய் முதல்  115 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வகை கால்நடை உணவு 35 ரூபாவிலிருந்து 85 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கால்நடை பண்ணை தொழிலை தொடர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36