நிறப்­பூச்சு நிறு­வன வாயுக்­க­சிவில் பாதிக்­கப்­பட்டோருக்கு நிவா­ரணம் 

25 Dec, 2015 | 10:51 AM
image

பாணந்­துறை நிறப்­பூச்சு உற்­பத்தி நிறு­வ­னத்தில் ஏற்­பட்ட 'தின்னர்' வாயுக் கசிவால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குறு­கிய மற்றும் நெடுங்­கால தீர்வுத் திட்­டங்­களை முன்­வைப்­ப­தற்கு தொழிற்­சாலை நிர்­வாகம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

தொழிற்­சா­லையை அண்­மித்த பிர­தே­சங்­க­ளி­லுள்ள நான்கு கிராம சேவகர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்­தினம் தாம் எதிர்­கொண்­டுள்ள சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­மாறு கோரி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். அதனைத் தொடர்ந்து பாணந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போதே தொழிற்­சாலை நிர்­வாகம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குறு­கிய மற்றும் நீண்டகாலத் தீர்வுத் திட்­டங்­களை முன்­வைப்­ப­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாணந்­துறை கெசல்­வத்தை ஜயா மாவத்­தையில் அமைந்­துள்ள நிறப்­பூச்சு உற்­பத்தி நிறு­வ­னத்தின் 'தின்னர்' களஞ்­சி­யப்­ப­டுத்தும் கொள்­க­ல­னி­லுள்ள குழாயில் ஏற்­பட்ட வெடிப்பால் பிர­தே­சத்தில் வாயுக் கசிவு ஏற்­பட்­டது. அதனால் மூச்­சுத்­தி­ண­ற­லுக்கு உட்­பட்ட பலர் வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் பிர­தே­ச­வா­சி­களும் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை நேற்று முன்­தினம் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது தொழிற்­சா­லையை அண்­மித்த நிரி­ய­வத்தை கிரா­ம­சே­வகர் பிரி­வி­லுள்ள மக்கள் பாவிக்கும் குழாய் நீருக்குப் பதி­லாக சுத்­த­மான நீர் பெற்றுக் கொடுப்­ப­தற்கும் சில நாட்­க­ளுக்கு மூன்று வேளை உணவு வழங்­கு­வ­தற்கும் தொழிற்­சாலை நிர்­வாகம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் குறித்த பிர­தே­சத்­தி­னூ­டாகச் செல்லும் வடி­கான்­களில் தேங்­கி­யுள்ள இர­சா­யனப் பதார்த்­தங்­களை நீக்கி வடி­கானை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கும், தொழிற்­சா­லையை அண்­மித்த பிர­தே­சத்தில் இர­சா­யனப் பதார்த்தம் படிந்­துள்ள மண்ணை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கும் தொழிற்­சாலை நிர்­வாகம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. மேலும் மருத்­துவ முகா­மொன்றை நடத்தி பிர­தேச மக்­களின் சுகா­தா­ரத்தை உறுதி செய்­வ­தற்கும் நிர்­வாகம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33