புதிய வீசா நடைமுறைகள் கொரிய முதலீடுகளை அதிகரிக்க உதவும் - பிரதமரிடம் கொரியத் தூதுவர்

Published By: Digital Desk 5

17 Aug, 2022 | 03:42 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற புதிய வீசா நடைமுறைகள் , மேன் மேலும் கொரிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவும் என இலங்கைக்கான கொரிய தூதுவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் சன்துஷ் வுன்ஜித் ஜியோன்க் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (17) கொழும்பு  7 இல் அமைந்துள்ள , பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற புதிய வீசா நடைமுறைகள் , மேன் மேலும் கொரிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவும் அதே வேளை , 1980 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகளவு முதலீட்டை செய்த நாடாகக் காணப்படும் கொரியாவிற்கு மீண்டும் அந்த நிலைமையை அடைய முடியும் என்று தூதுவர் தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி , நீர் வழங்கல் , விவசாய இயந்திர உற்பத்தி, மருந்து மற்றும் மருத்துவ உபகரண உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் கொரியாவிற்கு புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கையின் உற்பத்திகளை இந்து - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சந்தைக்கு விநியோகிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் பிரதமர் இதன் போது குறிப்பிட்டார். இரு நாடுகளுக்குமிடையில் தூதுவராலய தொடர்புகள் 45 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெவ்வேறு துறைகளில் கருத்தரங்குகள் மற்றும் கொரிய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்பார்ப்பதாக கொரிய தூதுவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44