ஞானசார தேரரின் ஒருநாடு ஒருசட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கைவிடுகின்றது அரசாங்கம்

Published By: Rajeeban

17 Aug, 2022 | 12:31 PM
image

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரர் தலைமையிலான ஒருநாடு ஒருசட்டஜனாதிபதி ஆணைக்குழுவின்  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் உடனடியாக தீர்வுகாணப்படவேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுவதாலும், பல தரப்பினரின் எதிர்ப்பு காரணமாகவும் அரசாங்கம் ஒருநாடு ஒருசட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என தீர்மானித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் ஒருநாடு ஒருசட்டத்தை விட கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான பல விவகாரங்கள் உருவாகியுள்ளன என இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போவதிலலை எனவும் இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள நிலைகாரணமாக சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் ஆதரவை பெறுவதற்கு  அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள இந்த விடயம் குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையலாம் என அரசாங்கமும் பிரதமரும் எதிர்பார்க்கும் பல கட்சிகள் முன்னாள் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ளன.

இதேவேளை ஞானசார தேரரின் ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற கேள்விக்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை தனது அமைச்சிற்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது  என்பது குறித்து ஜனாதிபதியோ ஜனாதிபதி செயலகமோ  எதனையும் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மோர்னிங்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48