லாகூர் பேரணியில் இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

Published By: Digital Desk 5

17 Aug, 2022 | 10:55 AM
image

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்காக மீண்டும் ஒருமுறை இந்தியாவைப் பாராட்டுவதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதுடன் ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவை விமர்சிக்கும் மேற்குலக நாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.

லாகூரில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய  போதே இம்ரான் கான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற பிராட்டிஸ்லாவா கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் அறிவிப்பை  இதன் போது சுட்டிக்காட்டிய இம்ரான் கான், ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பான அமெரிக்க அழுத்தத்தில் உறுதியாக நின்றதற்காகவும்  இந்தியாவை பாரட்டினார்.  

பாகிஸ்தானைப் போலவே அதே நேரத்தில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் மக்களின் தேவைக்கேற்ப தங்கள் வெளியுறவுக் கொள்கையை உருவாக்க முடியும் என்றால், தற்போதைய பாகிஸ்தான் ஆட்சியார்ளால் (பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கம்) ஏன் முடிவதில்லை என கேள்வி எழுப்பினார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இந்தியா அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடு, பாகிஸ்தான் அல்ல. ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டபோது இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் என்ன சொன்னார் என்று பார்ப்போம் என கூறியவாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோ காட்சியை இம்ரான் கான் காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06