மற்ற ஹீரோக்களைப் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்யவில்லை என்றும், மற்ற ஹீரோக்களிடம் கதைச் சொல்லச் சென்றால் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் படத்தின் ஒன்லைனை மட்டும் கேட்டுக் கொண்டு சிம்பு அச்சம் என்பதுமடமையடா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் அதன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் சிங்கமாக கர்ஜிக்கும் அந்த மூன்றெழுத்து நடிகரை மறைமுகமாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் விமர்சனம் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. 

தான் நடிக்கவிருக்கும் படத்தின் முழு கதையை இதை இயக்கவிருக்கும் இயக்குநரிடம் கேட்டது குற்றமா? என ரசிகர்கள் நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்களாம்.