தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 10:03 AM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் இந்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்த அவர், வெவ்வேறு பாராளுமன்ற பதவிகள், நிறுவனங்களுக்கான தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடந்த வாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை எட்டி , பொருளாதார - சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சர்வகட்சி வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய ஆரம்பத்திலிருந்து இதுகுறித்த கலந்துரையாடல்களில் பங்குபற்றிய கட்சிகள் மற்றும் சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கான அவற்றின் பரிந்துரைகள் தொடர்பான ஆவணம் ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இந்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை. 

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காகவே இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய எதிர்வரும் தினங்களில் பாராளுமன்ற நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சிகளுக்கிடையில் வெ வ்வேறு பாராளுமன்ற பதவிகள், நிறுவனங்களுக்கான தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40