கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த இடமாற்றமானது எதிர்வரும் ஜனவரி மாதம்  முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல நீதிச்சேவைகள் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.