இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை

Published By: Digital Desk 3

16 Aug, 2022 | 02:05 PM
image

இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எதிர்கால சிறுவர்களுக்கான தரமான சேவைகளை வழங்குவதற்காக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு, மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல் தொடர்பில் குறைபாடுகள் நிலவுவது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தேசிய வழிகாட்டல்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவர் பராமரிப்பு துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த துறைசார் நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளின் ஆரம்ப வரைவு தயாரிக்கும் பணி 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் இருக்கும் குறைந்தபட்ச தரநிலைகளை ஆய்வு செய்து  ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர், பல கட்டங்களாக சிறுவர் மேம்பாடு, சட்டம், சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள், இத்துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. 

சிறுவர் பராமரிப்பு தொடர்பான ஆறு முக்கிய அம்சங்கள் தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறுவர் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல் மற்றும் பதிவு செய்தல்,  சிறுவர் மேம்பாட்டு மையங்களின் பணியாளர்கள், நிறுவனமயமாக்கல் மற்றும் சிறுவர்களை மீண்டும் சமூக மயப்படுத்தல், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தர நியமங்கள், சிறுவர் ஆரோக்கியம், நலன்புரி மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுதல், மையங்களை சோதனையிடல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை இந்த தரநிலைகளின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00