யாழில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் மோதல் : மூவர் கைது

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 03:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

காங்கேசன்துறையிலிருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட மூவர்  ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் மஹவ ரயில் நிலையத்தில் மீள பயணத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது குறித்த தரப்பினர்களுக்கு இடையில் ஆசனத்தை பெற்று கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது மதுபோதையில் இருந்த மூவர் ரயிலுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதோடு மற்றும் அங்கிருந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.

 ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் மூவரும் மற்றும் இவர்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 26, 28 மற்றும் 57  வயதுடையவர்கள்  எனவும் மஹவ மற்றும் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35