தேசத்தைக் கட்டியெழுப்ப தொழிற்சங்கத் தலைவர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் - கரு

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 03:06 PM
image

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொழிற்சங்கத் தலைவர்கள் தமது பங்களிப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தினார். 

தாயகத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஏனையவர்களை விடவும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அதிக பொறுப்பு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொழிற்கத் தலைவர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்‍ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

“நமதுநாட்டு வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான காலகட்டத்தை நாம் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் தாய் நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெரும் பங்கு உள்ளது.

தொழிற்சங்க இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களுக்கு ஏனையவர்களை விட அதிக பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன். 

ஆட்சியாளர்களின் முதல் பணி மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதாகும். 24 மணி நேர மின்சாரம், பால்மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் விரைவில் வழங்கப்பட வேண்டும். அப்போது தொழிற்துறைகள், ஏற்றுமதி, சுற்றுலா ஆகியன வேகமாக அபிவிருத்தியடையும்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி சீர்குலைந்துள்ளதால், கல்வித் துறையை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நமது மதிப்புமிக்க வளமாககும் எனபதுடன் அது சிறந்த மூலதனமாகும். விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.  

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் பலப்படுத்தப்படும். 22 மில்லியன் மக்களின் தலைவிதியை எல்லாம் அதிகாரம் படைத்த ஒருவர் நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக, மக்கள் பிரதிநிதிகளிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்காணிப்பு குழு அமைப்பு முறை குறித்து அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

உலகில் வளர்ந்த ஜனநாயக நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்படும் கண்காணிப்புக் குழுக்களை மீண்டும் அமைப்பதன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் மக்கள் சேவையில் பங்கேற்க முடியும்.

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் அடிப்படையில், நாட்டின் வல்லுனர்களின் கருத்துக்களையும் எங்கள் அனுபவத்தையும் பயன்படுத்தி முன்மொழியப்பட்ட முன்மொழிவை அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதை நாங்கள் பாராட்டுகிறோம். 

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நாடாளுமன்றத்தில் கண்காணிப்பு குழுக்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோரால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து ஆலோசனைக் குழுவும் தொடங்கும்.

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தலைமையிலான 25 இலங்கையின் நிபுணர் பொருளாதார நிபுணர்கள் மற்றும் 25 தனியார் துறை ஜாம்பவான்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டடுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவிடம் பெரும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நிபுணர்களின் கருத்தை மதிக்காததால் தோல்வியடைந்தார். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக துறை சார் நிபுணர்கள் 2500 பேரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம், அரசியலில் ஈடுபடாத ஒரு சுயாதீன அமைப்பாககும. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்களுக்கு பொறுப்பை செய்யுமாறு தொழிற்சங்கத் தலைவர்களையும் நாங்கள் அழைக்கிறோம். ஒவ்வொவரும் இணைந்து பணியாற்றும்போதுதான்,  மகிழ்ச்சியாக வாழக்கூடிய நல்ல, அதிர்ஷ்டமான நாடொன்றை உருவாக்க முடியும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12