தேர்தல் வெற்றிக்காக இலங்கையிலிருந்து அகதிகள் படகுகள் வருகின்றன என்ற தகவலை பயன்படுத்த முயன்ற அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் -

Published By: Rajeeban

16 Aug, 2022 | 12:34 PM
image

அவுஸ்திரேலியாவில தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று இலங்கையிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகொன்று வருகின்றது என்ற செய்தியை வெளியிடுமாறு அப்போதைய பிரதமர் ஸ்கொட்மொறிசன் தன்னை கேட்டுக்கொண்டார் என்பதை முன்னாள் உள்துறை அமைச்சர் கரன் அன்ருஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து படகொன்று வருகின்றது என அறிவிக்குமாறு முன்னாள் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் உத்தரவிட்டார் என முன்னாள் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்புகொண்ட பிரதமர் படகு வருகின்றது என்ற அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார் எதிர்கட்சிகளிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார் என  முன்னாள் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தன்னை உள்துறை அமைச்சராகவும் நியமித்துள்ளார் என்பது தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ள கரன் அன்ரூஸ்தான் பொதுவான அரசியல் நோக்கமற்ற பாதுகாப்பான இறைமை எல்லை நடவடிக்கைக்கு தான் ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளார்.

படகு குறித்த செய்தியை  வாக்களர்கள் மத்தியில் வெளியிடுவது குறித்து பிரதமர் அலுவலகம் ஆராய்ந்தது குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேண்டுகோள் விடுத்ததும் படகு வருகின்றது என்ற அறிக்கையை 15 நிமிடங்களிற்குள் தயாரிக்குமாறு உள்துறை அமைச்சு உத்தரவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கொட் மொறிசன் ஐந்து அமைச்சரவை பதவிகளை இரகசியமாக வகித்தார் என்ற தகவல் பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையிலேயே தேர்தல் வெற்றிக்காக அவர் இலங்கை குடியேற்றவாசிகளின் படகுகளை பயன்படுத்த முயன்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிரதமர் செயற்பட்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது அவர் நாடாளுமன்றத்திலிருந்து பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடு;துள்;ளேன் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52