மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை தீவு பகுதியில் பனை மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் மூன்றைத் தகவலொன்றில் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இந்தக் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இந்தக் குண்டுகள் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- அப்துல் கையூம்