வில்வம்

Published By: Devika

16 Aug, 2022 | 10:40 AM
image

வில்வம் பழத்தின் தோல் பகுதி வழவழப்பாகவும், கெட்டி­யாகவும் இருக்கும். எனினும் இனிப்­புச் சுவை­யுடையதாகும். கொலஸ்ட்­ரோலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. வயிற்று வலியைக் குணப்படுத்தும்.

வயிறு வலியை போக்க வில்வத் தளிரை வதக்கிச் சூடாக்கி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நுண்ணு­யிர்கள் கொல்லப்பட்டு வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்­பான பல கோளாறுகளையும் சரி செய்ய உதவும். 

வில்வ இலை, வில்வம் பழம் இரண்­டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்­களால் ஏற்படும் பேதிக்கு அரு­மருந்­தாகும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்­தொல்லை நீங்கும். 

சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்­பாலை பெருக்கும். 

மாதவிடாய் சம்பந்தமான பிரச்­சினைகளை குணமாக்கும். 

சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வில்வம் மிக சிறந்த மருந்தாகச் செயல்­படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் நீங்கும்.

வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொண்டு அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்­லை­கள் நீங்கும். 

கண்பார்வை தெளிவுபெற உதவும். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்­படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04