அமெரிக்காவின் சியாட்டலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சியாட்டில் பொலிஸார் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக இடம்பெற்ற  ஆர்ப்பாட்டப் பேரணியின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு  இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஐவரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சியாட்டல் தீயணைப்பு படைப்பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.