3 கால்களைக் கொண்ட 18 அடி நீளமான முதலை பிடிக்கப்பட்டது 

Published By: Ponmalar

10 Nov, 2016 | 10:06 AM
image

அதிக மழையுடனான காலநிலையின் கார­ண­மாக நில்­வளா கங்கை பெருக்­கெ­டு­த்துள்ள  நிலையில் அதி­லி­ருந்து சுமார் 18 அடி நீள­மான முதலை ஒன்று மாத்­தறை வெலே­கொட பிர­தே­சத்தில் கரை­யே­றி­யுள்­ளது. இது­வ­ரையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட முத­லை­களுள் இதுவே மிகப்­பெ­ரிய முத­லை­யாகும் என வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கரை­யே­றி­யுள்ள இந்த முத­லையை பிர­தே­ச­வா­சிகள் மற்றும் வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் பலத்த  முயற்­சியை மேற்­கொண்டு பிடித்­தனர்.  இம்­மு­த­லைக்கு மூன்று கால்கள் மட்­டுமே காணப்­பட்­ட­தா­கவும் பிறக்கும் போதே இந்த முதலை மூன்று கால்­க­ளு­ட­னேயே   பிறந்­துள்­ள­தா­கவும் வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு  பலத்த  சிர­மத்­துக்கு மத்­தியில் பிடிக்­கப்­பட்ட முத­லையை மாத்­தறை பொலிஸ் அதி­கா­ரிகள், மிரிஸ்ஸ வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் மற்றும் கல­மெ­டிய வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் ஆகியோர் உயிருடன் மீண்டும் நில்வளா கங்கையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right