2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்­நாட்டு யுத்­தத்தில் பங்­கேற்ற ஆயு­தப்­ப­டை­யினர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டித்து ஈட்­டிய வெற்­றியின் கார­ண­மாக ‘யுத்த கதா­நா­ய­கர்கள்’ (War heroes) என்­ற­ழைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களை எச்­சந்­தர்ப்­பத்­திலும் பாது­காப்­ப­தற்கு தான் உறு­தி­பூண்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன கூறி­வ­ரு­வ­தை­ யாரும் அறிவர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் முன்னாள் 3 கடற்­படைத் தள­ப­தி­க­ளுக்­கெ­தி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் வழக்கு தொட­ரப்­பட்­டது தவறு என்ற தோர­ணையில் ஜனா­தி­பதி மைத்­திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்கை மன்றக் கல்­லூரியில் ஆற்­றிய உரையில் தனது கடு­மை­யான அதி­ருப்­தி­யையும் விச­னத்­தையும் தெரிவித்­தி­ருந்­த­தையும் யாரும் அறிவர்.அதன் பின்பு ஆற்­றிய உரை­யொன்றில் தான் அவர் மேற்­கண்­ட­வாறு திட்­ட­வட்­ட­மாக தெரிவித்தார். உள்­நாட்டு யுத்­த­மொன்றில் வெற்­றி­யீட்­டிய ஆயு­தப்­ப­டை­யி­னரை யுத்த கதா­நா­ய­கர்கள் என்­ற­ழைப்­பது சரி­யா­னதா அல்­லது அவ­சி­யமா என்ற கேள்வி எழு­கி­றது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் யுத்தம் முடிந்து நீண்ட நாட்­க­ளாக கோல­ாக­ல­மான கொண்­டாட்­டங்கள் நடத்­தப்­பட்­ட­தோடு, வரு­டா­வ­ரு­டமும் அக்­கே­ளிக்­கைகள் தொட­ரப்­பட்டு வந்­தன. 2015.01.08 இல் இடம் பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்பு அத்­த­கைய கொண்­டாட்­டங்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­யி­னும், அது முற்று முழு­தாக நீங்­க­வில்லை என்­ப­தையே யுத்த கதா­நா­ய­கர்கள் எப்­போதும்  பாது­காக்­கப்­ப­டு­வார்கள் என்று ஜனா­தி­பதி மைத்­திரி­பால கொண்­டுள்ள நிலைப்­பாட்டில்  தொக்கி நிற்­கி­றது எனலாம். 

வர­லாற்று நிகழ்­வுகள்

வர­லாற்று ரீதி­யாக பார்ப்­போ­மாயின் கடந்த கால எல்லா அர­சாங்­கங்­களும், இழைத்த  தவ­றுகள், அதா­வது தமி­ழ­ருக்­கெ­தி­ராக அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சமூக ரீதி­யாக கண்­மூ­டித்­த­ன­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த பார­பட்­சங்கள் மட்­டு­மல்­லாமல், தமிழ் தலை­மைகள் முன்­னெ­டுத்து வந்த சாத்­வீகப் போராட்­டங்கள் படை பலம் கொண்டு நசுக்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரா­டு­வதை விட வேறு­வ­ழி­யில்லை என்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர். இத்­திசை வழி­யூ­டா­கவே தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்­றது என்ற வர­லாற்­றினை அனே­க­மான தென்­னி­லங்கை புத்­தி­ஜீ­வி­களோ அர­சியல் ஆய்­வா­ளர்­களோ கண்டு கொள்­வது அரி­தா­யுள்ளது.

1956 இற்குப் பின்பு 

ஆம், வர­லாற்று ரீதி­யாக பார்க்­கு­மி­டத்து 1956இல் சிங்­களம் மட்டும் சட்டம் இயற்­றப்­பட்டு தமிழர் ஓரங்­கட்­டப்­பட்­டது மட்­டு­மல்­லா­மல், 1958இல் தமி­ழ­ருக்­கெ­தி­ராக முத­லா­வ­தாக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட பரந்­த­ள­வி­லான இனக்­க­ல­வரம் எத்­துணை கோர­மா­ன­தென்றால், தமிழ், சிங்­கள இரு இனங்­களும் பிரிந்து செல்லும் தருணம் வந்து விட்­டதா என்று எண்ணத் தோன்­று­கின்­றது என்று அன்­றைய ஊட­கத்­துறை ஜாம்­பவான் ராசி வித்­தாச்சி அக்­க­ல­வரம் தொடர்­பாக எழு­திய நூலில் மிகக்­க­வ­லை­யோடு  கூறி­யி­ருந்­தது என்றும் நினை­வு­கூ­ரத்­தக்­க­தாகும். அவ­ச­ர­காலம் 58 - இலங்கை இனக்­க­ல­வ­ரத்தின் சரிதை என்று மகு­ட­மிட்டே அவர் அந்த நூலை வெளியிட்­டி­ருந்தார். அது எந்த ஒரு அர­சியல் மாண­வ­னி­னாலும் கூர்ந்து படிக்­கப்­பட வேண்­டிய நூலாகும்.

1977இல் ஜய­வர்த்­தன ஆட்­சியின் பின்பு 

பின்பு 1977இல் ஜே.ஆர். ஜய­வர்த்­தன அர­சாங்கம் தமிழ் மக்­களின் அமோக ஆத­ர­வையும் பெற்றே 5/6 பெரும்­பான்மை பலத்­தோடு  பத­விக்கு வந்து. ஒரு சில மாதங்கள் மட்டும் கழிந்த கையோடு, தக்க காரணம் ஏதுவும்  இன்றி, நான் தோற்றுப் போன சிங்­கள இனத்தின் தலைவன் என்று வர­லாறு இருக்கக் கூடாது என்­றெல்லாம் மார்­தட்டி இரண்­டா­வது இனக்­க­ல­வரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தற்கு பாத்­தி­ர­வா­ளி­யாக இருந்­தார். அடுத்து, 1981 யாழ்ப்­பாண மாவட்ட சபைத்­தேர்தல் நடை­பெற இருந்த தறு­வா­யில், அரும் பெரும்­பொக்­கி­ஷ­மான யாழ். நூல்­நி­லையம் அரச குண்­டர்­களால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. அன்­றைய அமைச்­சர்கள் சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்க  ஆகியோர் அப்­போது யாழ்ப்­பா­ணத்தில் முகா­மிட்டு தங்­கி­யி­ருந்­தனர். பின்பு, கறுப்பு ஜூலை என்று உலகம் பூரா­கவும் இனங்­கா­ணப்­பட்ட கோரத்­தாண்­டவம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டதை அடுத்தே உண்­மையில் யுத்தம் வெடித்­தது என்­பது வர­லாறு.

26 வரு­டங்­க­ளுக்கு பின் 2009 மே மாதம் யுத்தம் முற்றுப் பெற்­ற­தா­யி­னும்,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெற்றிக் கொண்­டாட்­டங்­களில் அக்­கறை கொண்­டி­ருந்­தாரே ஒழிய, சமா­தா­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கு கரி­சனை கொள்­ள­வில்லை. எவ்­வா­றா­யி­னும், சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மா­கவே அவர் தனது நண்­பரும், முன்னாள் சட்­டமா அதி­ப­ரு­மா­கிய சி.ஆர்.டி. சில்வா தலை­மையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்­றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு LLRC 15.05.2010ஆம் திகதி நிய­மித்தார். அர­சாங்கம் பொறுப்புக் கூற வேண்­டிய விட­யங்கள் மீது இவ்­ ஆ­ணைக்­குழு கவனம் செலுத்தும் என்று உல­கத்­திற்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­யி­னும், ஆயு­தப்­ப­டை­யினர் கடி­ன­மான சூழ்­நி­லை­யில் செயற்­பட்­டி­ருந்த போதும், அவர்கள் தவ­றுகள் இழைத்­த­தா­கவோ, குறிப்­பாக வைத்­தியசாலை மீது தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவோ கூறமுடி­யாது என்று அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  அது மட்­டு­மல்­லாமல் ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த சிலர் பால் வேறு­பாடு பாராமல் 4ஆம் மாடிக்கு அழைக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் நிகழ்ந்­தன. 

எவ்­வா­றா­யி­னும், முக்­கி­ய­மாக தேசிய இனப்­பி­ரச்­சி­னையைப் பொறுத்தவரை, கடந்த கால எல்லா அர­சாங்­கங்­களும் புரை­யோ­டிப்­போயுள்ள அப்­பி­ரச்­சி­னைக்கு வேண்­டிய அர­சியல் தீர்வு காணத்­த­வ­றி­ய­தா­லேயே  காலத்­துக்கு காலம் வன்­செ­யல்­களும் இறு­தியில் யுத்­தமும் மூண்­டது என்­றும், எனவே ஆக்க பூர்­வ­மான  அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டி­யது அவ­சியம் என்றும் ஆணைக்­கு­ழு­வினால் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இன்­றைய சிறி­சேன-, விக்­கிர­ம­சிங்க நல்­லாட்சி அர­சாங்கம் இப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்பு மூலம் நிலை­யான தீர்வு கொண்­டு­வ­ரப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. மேற்­கு­றித்த நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரையும் கவ­னத்தில் எடுக்­கப்­பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்­த­தோடு, அது அவ்­வாறு நிறை­வேற்­றப்­படும் என்று ஊட­கங்கள் வாயி­லாக அறியக் கூடி­ய­தாக உள்­ளது. 

யுத்தம் பற்­றிய நூல்கள்

இது விட­ய­மாக மூன்று நூல்கள் இற்றை வரை வெளியி­டப்­பட்­டுள்­ளன. ஏறத்­தாழ 4 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக கோத்­தாவின் யுத்தம் என பிர­பல  ஊட­க­வி­ய­லாளர் சந்­தி­ரப்­பெ­ரு­மா­வினால் எழு­தப்­பட்ட நூல் காலி நகரில் வைத்து வெளியி­டப்­பட்­டது. அடுத்­த­தாக அன்று வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனை கொன்ற 53ஆவது படைப்­பி­ரி­வுக்கு தலைமை தாங்­கி­ய­வ­ரா­கிய மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன நந்திக் கட­லுக்­கான பாதை என்ற தலைப்பில் எழுநூறுக்கும் மேற­்பட்ட பக்­கங்கள் கொண்ட நூல் சிங்­கள, ஆங்­கில   இரு மொழி­க­ளிலும் வெளியி­டப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லேயே  பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் அந்த வெளியீடு இடம்பெற்­றது. கமால் குண­ரட்ண பத­வி­யி­லி­ருந்து ஓய்வுபெற்று ஒரு சில நாட்­க­ளிலே அந்த நூல் வெளியி­டப்­பட்டதென்­றால், அவர் சேவையில் இருந்த போது எவ்­வ­ளவு காலம் இதற்­காக பாடு­பட்­டி­ருப்பார் என்­பதை ஊகிப்­பது கடி­ன­மல்ல. மூன்­றா­வது நூலும் பின்பு வெளியி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெரி டி சில்வா அந்த நூலை வெளியீடு செய்தார். முன்பு கமால் குண­ரட்­ணவின் நூல் வெளியீட்டின் போது பிர­தம விருந்­தி­ன­ராக விளங்­கிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே இந்த நூல் வெளியீட்டு வைப­வத்­திலும் பிரதம விருந்தினராக பங்குபற்றியிருந்தார். அந்த வகையில், இராணுவத்தரப்பினர் மத்தியில் ஏதோவிதமான சார்பு நிலை உளவியல் பரிமாணம் இருப்பதாக தென்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வேண்டிய ஒத்துழைப்பினை நல்காதிருப்பதாக அறிக்கைகள் வெளியாகி­யிருந்தன. அந்த நிலையில், மிக அண்மை­யிலேயே முன்னாள் புலனாய்வுத் துறை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டதாக அறியக் கிடக்கிறது. 

இன்றைய சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்து வருகின்றபோதும், எந்த வகையிலும் எப்படியாவது இந்த அரசாங்கத்தை வீழ்த்தி விட வேண்டும் என்று மஹிந்த ராஜ

பக் ஷ தரப்பினர் கண்டுகொண்டிருக்கும் கனவு நனவாகினால்,முன்னரைக் காட்டிலும் பேராபத்தான நிலைமை தோன்றும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை என்பது வெள்ளிடைமலை. 

வ. திரு­நா­வுக்­க­ரசு