இரகசியமாக மூன்று பதவிகளை வகித்த முன்னாள் பிரதமர் - அவுஸ்திரேலியாவில் புதிய சர்ச்சை

Published By: Rajeeban

15 Aug, 2022 | 04:08 PM
image

முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் இரகசியமாக மூன்று அமைச்சு பதவிகளைவகித்தார் என்ற   என்ற விபரம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.

சுகாதாரம் நிதி மற்றும் வளங்கள் அமைச்சின் இணைந்த அமைச்சராக ஸ்கொட்மொறிசன் பதவி வகித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஏற்றுக்கொள்ள முடியாத விசித்திரமான விடயம் என தெரிவித்துள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இது குறித்து சட்ட ஆலோசனையை பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கான பிரிட்டிஸ் மகாராணியின் பிரதிநிதி கவர்னர் ஜெனரல் டேவிட் ஹேர்லி தான் ஸ்கொட்மொறிசன் இரகசியமாக அமைச்சரவை பதவிகளை ஏற்பதற்கு அனுமதியளித்த ஆவணத்தில் கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ளார்.

அது அரசமைப்பின் 64 பிரிவின் அடிப்படையிலான நடவடிக்கை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கையை அல்பெனிசும் சட்டநிபுணர்களும் ஸ்கொட்மொறிசனின் சகாக்களும் கண்டித்துள்ளனர்.

தாங்கள் தங்களுடைய அமைச்சு பொறுப்புகளை பிரதமருடன் பகிர்ந்துகொள்ளும் விடயம் சில அமைச்சர்களிற்கு கூட அவ்வேளை தெரிந்திருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் கொவிட்டினால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதை கருத்தில் கொண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் கிரெய்க் ஹன்ட் 2020 இல் அமைச்சினை பகிர்ந்துகொள்ள இணங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவ்வேளை நிதியமைச்சராக பதவி வகித்த மத்தியாஸ் கோர்மனிற்கு இந்த விவகாரம் கடந்த வாரமே தெரியவந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17