நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் கைது

Published By: Digital Desk 4

14 Aug, 2022 | 09:26 PM
image

 நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயாரிடமிருந்த கைக்குழந்தை அழுததால் தான் பார்ப்பதாக கூறிய மற்றொரு பெண் குழந்தையை வாங்குவதாக பாசங்கு செய்து தாயார் அணிந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.

சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகையும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட அரிசி பாடசாலைகளுக்கு வழங்கும் பணி...

2024-04-19 15:51:28
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49