அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - வஜிர அபேவர்த்தன நம்பிக்கை

Published By: Digital Desk 5

14 Aug, 2022 | 10:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைத்திட்டத்தை மக்கள் விளங்கி தீர்மானம் மேற்கொண்டிருந்தால் நாடு இந்த நிலைக்கு சென்றிருக்காது.

அத்துடன் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஜனாதிபதி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்து, அதனை கிராம் கிராமமாக பகிர்ந்தளித்தோம். ஆனால் அந்த கொள்கை திட்டத்தை மக்கள் குப்பை தொட்டியில் போட்டார்கள். அதன் விளைவாக இன்று நாடு குப்பைத் தொட்டியில் விழுந்துள்ளது.

அன்று நாங்கள் வழங்கிய கொள்கை பிரகடன வெளியீடை மக்கள் மீண்டும் வாசித்துப்பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மக்கள் அன்று எமது கொள்கை வெளியீட்டை சுயபுத்தியுடன் வாசித்துப்பார்த்து தீர்மானித்திருந்தால், எமது நாடு இன்று ஆசியாவின் உயர்ந்த இடத்தில் இருந்திருக்கும். என்றாலும் பொய் வாக்குறுதிகள்,  போலிப்பிரசாரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நிகரான வேறு ஒரு தலைவர் உலகிலேயே இல்லை.

அதனால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயமாக நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயங்களை ஒவ்வொன்றாக செயற்படுத்திக்கொண்டு செல்கின்றார். அதனால் ஜனாதிபதி மீதான நம்பிக்கை தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ரணில் விக்ரமசிங்க இன்று தேசிய சொத்தாக இருக்கின்றார். இலங்கையை ஆசியாவின் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதற்காக அந்த தேசிய சொத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02