பாடசாலைகள் வழமைபோன்று இயங்கும் ! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 03:21 PM
image

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் வாரத்தில் 5 நாட்களும் வழமைபோன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளிலும் காலை 7.30 மணிக்கு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை பெற்று கொடுக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும்   அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பாடசாலை அதிபர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள் பெற்று கொடுப்பது தொடர்பாக மாகாண அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள் அதிபர்களுக்கு வழங்கப்படும்  

எதிர்வரும் 3 மாதங்களில் பாடசாலை நேரங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

மேலும் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் தவிர்ந்துக் கொள்வதோடு பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மேலும் மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும்  எனவும்  கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07