கப்பல் விவகாரத்தில் சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளரின் கருத்திற்கு இந்தியாவின் பதில் என்ன?

Published By: Rajeeban

12 Aug, 2022 | 05:41 PM
image

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சமீபத்தில் இந்தியா பற்றி தெரிவித்திருந்த கருத்துக்களில் உள்ள உள்ளாந்த விடயங்களை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மீது சில நாடுகள் அழுத்தங்களை முற்றிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது.

அறிக்கையில் இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த உள்ளார்ந்த விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அது தனது தீர்மானங்களை சுதந்திரமாக எடுக்கின்றது.

இதுவரை இந்திய இலங்கை உறவுகளை பொறுத்தவரை  எங்களின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த வருடம் மாத்திரம் இந்தியா முன்னொருபோதும் இல்லாதவகையில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 3.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்தியாவும் இலங்கையின் ஜனநாயகம் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவாகவுள்ளது.

இந்திய சீன உறவுகளை பொறுத்தவரை பரஸ்பர மதிப்பு பரஸ்பர உணர்வுபூர்வமான தன்மை பரஸ்பர நலன்கள் ஆகிய உறவுகளை முன்னேற்றகரமானதாக்குவதற்கு அடிப்படையான வி;டயங்கள் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்திவந்துள்ளது.

எங்கள் பாதுகாப்பு கரிசனைகளை பொறுத்தவரை இது ஒவ்வொருநாட்டினதும் இறைமையை அடிப்படையாக கொண்ட உரிமை.

நாங்கள் எங்களின் நலன்களை அடிப்படையாகவைத்தே சிறந்த மதிப்பீடுகளை மேற்கொள்வோம்.

இது இயல்பாகவே எங்கள் பிராந்தியத்தில் காணப்படும் நிலைமைகளை குறிப்பாக எல்லையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் எடுக்கும்என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33