மிக் விமான கொள்வனவில் மோசடி : உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்ல முன் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

Published By: Vishnu

12 Aug, 2022 | 09:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற 7 பில்லியன் ரூபா மோசடிகள் குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாடு செல்ல முன் வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

இன்று 12 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணை, கோட்டை நீதிவான் திலின கமகே  முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, டுபாய் செல்ல முன் வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

12 ஆம் திகதி உதயங்க வீரதுங்க மன்றில் ஆஜரான நிலையில், அவர்சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன மன்றில் ஆஜராகி வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்துமாறும், அவர் வகிக்கும்  அரச பணி நிமித்தம் வெளிநாடுச் எல்ல வேண்டியுள்ளதாகவும் கோரினார்.

எனினும் இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த விசாரணையாளரான சி.ஐ.டி.யின்  பிரதான பொலிஸ் பரிசோதகர்  மொஹான் வீரசிங்க, குறித்த கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனம் வெளியிட்டார்.

 உதயங்க வீரதுங்க இதுவரை விசாரணைகளுக்கு முழுமையான வாக்கு மூலம் ஒன்றினை அவ்ழங்கவில்லை என இதன்போது வெலிப்படுத்திய அவர், ஆவணங்கள் இன்றி வாக்கு மூலம் வழங்க முடியாது என அவர் கூறி அதனை நிராகரித்து வரும் பின்னணியில் அவர் வெளிநாடு செல்வது விசாரணைகளை பாதிக்கும் என கூறினார்.

அத்துடன்  2015 முதல் இடம்பெற்ற விசாரணைகலில்  அவரைக் கைது செய்ய  இருந்த சிரமம் தொடர்பிலும் நீதிமன்றுக்கு தெளிவுபடுத்திய விசாரணை அதிகாரி, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டார்.

 அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் திலின கமகே, சி.ஐ.டி.யினர் எதிர்ப்பு  வெளியிடுவதால் வெளிநாடு செல்ல அனுமதியளிக்க முடியாது எனக் கூறி,  உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை நிராகரித்தார்.

அத்துடன் இவ்விசாரணைகளுக்கு முழுமையான வாக்கு மூலம் ஒன்றினை வழங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

 கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விடயம்  தொடர்பிலேயே  உதயங்கவுக்கு மேலதிகமாக, மேலும் நான்கு வெளிநாட்டு பிரஜைகளையும் இரு வெளி நாட்டு நிறுவங்களையும் அம்மோசடிகளுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்களாக விசாரணையாளர்கள் பெயரிட்டுள்ளனர்.   

உக்ரேன் மார்ஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும் உக்ரேன் பிரஜையுமானடி.ஏ. பெரகெடோவ், டி.எஸ். எலயன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிங்கப்பூர் பிரஜையுமான ரி.எஸ். லீ, உக்ரைன் பிரஜையும் பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறுவன பணிப்பாளருமான மைகோலா குல்டேர்கைவ், சிங்கப்பூர் பிரஜையான டி.எஸ்.எலயன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என்.ஜி.லை கிம்,  டி.எஸ். எலயன்ஸ் நிறுவனம் மற்றும் பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் ஆகியவையே இந்த விவகாரத்தில் சந்தேக நபர் பட்டியலில் உள்ள ஏனைய நபர்களும் நிறுவங்களும் ஆகும்.

 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரன்சிஸ்  தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தற்போது சி.ஐ.டி.யின் நிதிக் குர்ர விசாரணைப் பிரிவினர் அவற்றை முன்னெடுக்கின்றனர்.

 2006 ஆம் ஆண்டு உக்ரைனின் யுக்ரேன் மாஷ் எனும் நிறுவனத்திடம் இருந்து  லண்டன் தரகு நிறுவனம் என கூறப்பட்ட பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலையீட்டுடன் 4 மிக் 27 ரக விமாங்கள் கொள்வனவு செய்யப்ப்ட்டிருந்தன. அத்துடன் இல்ங்கையிடம் இருந்த அதே ரக விமாங்கள் நான்கினை ஓவர்ஹோல் நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்ப்ட்டிருந்தது. இதன்போது பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

1980 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்ப்ட்ட குறித்த விமாங்கள் கொள்வனவின் போது உரிய விலையை விட கிட்டத்தட்ட 400 மில்லியன் ரூபா அதிகம் விலை வைக்கப்ப்ட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டன.  இது குறித்தான மேலதிக விசாரணைகளில்  உதயங்க வீரதுங்க இக்கொடுக்கல் வாங்கலின் பிரதான நபராக செயற்பட்டுள்ளமையை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர்.

 இந் நிலையிலேயே இம்மோசடி தொடர்பில்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் B 639/15 எனும் இலக்கத்தின் கீழ் கோட்டை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதில்  சந்தேக நபர்களாக 5 பேரும் இரு நிறுவங்களும் பெயரிடப்பட்டனர். அவர்களில் முதல் சந்தேக நபரான உதயங்க வீரதுங்க கடந்த 2020 பெப்ரவரி 14 ஆம் திகதி   கைது செய்யப்பட்டார்.

உதயங்க வீரதுங்க சந்தேக நபராக பெயரிடப்ட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்த பின்னனியிலேயே கைத் அவ்வாரு கைது செய்யபப்ட்டார். .  2016.10.20 ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ்  இந்த பிடியாணையை பிறப்பித்திருந்தார்.

 அதன் பின்னர், ஏற்கனவே உதயங்கவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, கடந்த 2017.08.11 ஆம் திகதியும் பிடியாணையை மீளப் பெறுமாறு கோரிய போதும் அதனை அப்போது நீதிவான் லாங்கா ஜயரத்ன நிராகரித்திருந்தார்.  அந்த நிராகரிப்பு உத்தரவை 2017.08.21 ஆம் திகதி அவர் பிறப்பித்திருந்தார்.

 இந் நிலையில் அப்போதிருந்த நிலைமையும் தற்போது உள்ள நிலைமையும் வேறு வேறு எனக் கூறி  சட்டத்தரணி  ஜி. குணரத்ன பிடியாணையை ரத்து செய்ய  கடந்த 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கோரிய போது, அப்போது கோட்டை நீதிவானாக இருந்த  ரங்க திஸாநாயக்க பிடியாணையை மீளப் பெற முடியாது என அறிவித்திருந்தார்.

 2006 ஆம் ஆண்டு உக்ரேனிடமிருந்து இலங்கை மிக் 27 ரக போர் விமனங்கள் நான்கினை கொள்வனவு செய்திருந்தது. இந் நடவடிக்கையானது அப்போதைய ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த 2020 பெப்ர்வரி மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க 2020 ஏபரல் 3 ஆம் திகதி 25 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 500 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் உதயங்க வீரதுங்கவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டிருந்தது.

 அவ்வாறான நிலையிலேயே, வெலிநாடு செல்ல 12 ஆம் திகதி உதயங்க வீரதுங்க சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58