கோட்டாவின் காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு இனவாத பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது - ஹக்கீம்

Published By: Vishnu

12 Aug, 2022 | 09:23 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ஒரு இனவாதி அல்ல. என்றாலும் தற்போது அவருடன் இருப்பவர்கள் அவரை வித்தியாசமாக பார்ப்பதில் சந்தேகம் இல்லை.

ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு இனவாத பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

அத்துடன் கிழக்கு மாகாண விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் விவசாயிகளுக்கு தங்களின் அறுவடைக்காக டீசல் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு 4இலட்சம் லீட்டர் டீசல் தேவைப்படுகின்றது. ஆனால்  1இலட்சம் லீட்டரே வழங்கப்படுகின்றது.

 இதனால் உரிய காலத்தில் அவர்களுடைய அறுவடைகளை செய்யமுடியாமல் போயிருக்கின்றனர். அதனால் அந்த விவசாயிகளுக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று கரையோரப்பகுதியில் இருக்கும் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாள் ஒன்றுக்கு அவர்களுக்கு 40லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் மீனவர்கள் பாரியளவில் கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். அதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் தேவைகளை விரைவாக செய்துகாெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதியின் உரையில் பல திருப்திகரமான விடயங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி ஒரு இனவாதி அல்ல. என்றாலும் தற்போது அவருடன் இருப்பவர்கள் அவரை வித்தியாசமாக பார்ப்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பாக கடந்த காலங்களில் ஒருநாடு ஒருசட்டம் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர், இனங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசக்கூடிய ஞானசார தேரர்.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.

 இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்விடம் கோரிக்கை விடுத்தபோதும் அவர் அதுதொடர்பில் கண்டுகொள்ளவில்லை.

அதேபோன்று கொவிட் காலத்தில் அவர் முஸ்லிம்களை தூரப்படுத்தி வந்தார். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் சித்தரித்து வந்தார். இவ்வாறான பல கஷ்டங்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்க நேரிட்டது.

அத்துடன் ஜனாதிபதி தெரிவித்த கொள்கை பிரகனத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்காக அவருக்கு ஆதரவளிக்க தயார் என பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 

100வீடுகள் முற்றாக அழிவடைந்திருக்கின்றன. மழைகாலத்தில் அந்த பிரதேசம் மூழ்குவது கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதனால் ஜனாதிபதி இந்த இடத்தை பார்வையிட்டு, இந்த பிரதேச மக்களுக்கு அரச காணிகளில் வேறு இடங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17