கடன் மறுசீரமைப்புக்கு செல்லாவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் - சம்பிக்க எச்சரிக்கை

Published By: Digital Desk 5

12 Aug, 2022 | 04:50 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடன் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் எந்தவொரு நாடும் எமது நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கு  வரப்போவதில்லை. அதனால்  நாங்கள் சம்பிரதாய பொருளாதாரத்திற்கும் அப்பால் சென்று செயற்பட வேண்டும். 

இல்லையேல் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு  மேலும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியேற்படும் என எதிர்கட்சியின்  சுயாதீன எம்.பியான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

லெபனான் தியுருப் நகரில் நபர் ஒருவர் ஆயுதத்துடன் வங்கியொன்றுக்கு சென்று, அந்த வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த அவரின் பணத்தை கோரியிருந்ததை சர்வதேச ஊடகங்கள்  காட்டப்பட்டிருந்தன.

குறித்த நபரின் உறவினர் ஒருவரின் வைத்தியசாலை கட்டணத்தை செலுத்துவதற்கே இவ்வாறு அந்த நபர் ஆயுதத்துடன் வங்கிக்கு சென்றிருக்கின்றார்.  லெபனான் 2020இல் வங்குராேத்து அடைந்தது.

அதனால் வங்கி கட்டமைப்புகளுக்கு தங்களின் பண வைப்பாளர்களின் பணத்தை திருப்பிக்கொடுக்க இன்றுவரை முடியாமல் போயிருக்கின்றது. இலங்கை 2022 ஏப்ரல் 12ஆம் திகதி வங்குராேத்து அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதனால் லெபனானில் இடம்பெற்ற இந்தநிலை எமது நாட்டிலும் எதிர்காலத்தில்  இடம்பெறக்கூடாது என பிராத்திக்கின்றோம்.

அத்துடன் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் கூறப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் அமைக்கப்படுமா என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் பொருளாதார நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தெளிவு இல்லாது உள்ளது. நல்லாட்சி காலத்தில் நான் கடன் முகாமைத்துவம் தொடர்பான அறிக்கையொன்றை  அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தேன்.

அப்போது ஏற்படக் கூடிய நிலைமை தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தேன். அதில் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் கூறியிருந்தேன்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களுக்காக அதனை செய்ய வேண்டும்.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி சொத்துக்களில் இருந்து நூற்றுக்கு 57 அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வங்கியில் வைப்பாளர்களின் கோடிக்கான பணம் மிகவும் மோசமான முறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. இன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

அதேபோன்று ஈபிஎப், ஈடிஎப். களில் முதலீடு செய்திருக்கும் 80 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் கணக்குகளுக்கு இதன் மூலம் அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால், அதனை செய்யவதற்கு கஷ்டம் என்றால், சர்வதேச நாணய நிதியத்துக்கும் அந்த செயற்பாடு இல்லை என்றால் எந்தவொரு நாடும் எமது நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கு  வருவதில்லை.

அப்படியானால் நாங்கள் சம்பிரதாய பொருளாதாரத்திற்கும் அப்பால் சென்று செயற்பட வேண்டும். இல்லையேல் எதிர்வரும் இரண்டு வருடங்கள் மேலும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியேற்படும்.

இப்போது மின்வெட்டு குறைவடைவதற்கு திறமைகள் காரணமல்ல, அதற்கான கேள்வி 25 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதனால்தான் மின்வெட்டு நேர அளவு குறைவடைந்துள்ளது. இதனால் பொருளாதாரம் மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதனை தடுக்க முறையான வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47