பலோச்சிஸ்தானில் இடம்பெறும் காணாமல்போகச்செய்யப்படுதல் போலி என்கவுன்டர்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

Published By: Rajeeban

12 Aug, 2022 | 03:07 PM
image

பலோச்சிஸ்தானில் இடம்பெறும் காணாமல்போகச்செய்யப்படுதல் போலி என்கவுன்டர்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பாக்கிஸ்தான்  தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பலோச்சிஸ்தானின் ஜியாரட் மாவட்டத்தில் இடம்பெறும் போலிஎன்கவுண்டர்கள் மற்றும்  மனித உரிமை மீறல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலோச்சிஸ்தானின் செயற்பாட்டாளர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பலோச்சிஸ்தானில் மனித உரிமைகளை மீண்டும் உருவாக்கு பலோச்சிஸ்தானை ஆக்கிரமிப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் இனப்படுகொலைகள் முடிவிற்கு வரவேண்டும் என்ற பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலோச்சிஸ்தானின் சுதந்திரம் குறித்து கோசம் எழுப்பிய அவர்கள் பாக்கிஸ்தான் இராணுவம் பலோச்சிஸ்தான் பொதுமக்களை கொலை செய்கின்றது எனவும் குற்றம்சாட்டினர்.

பலோச்சிஸ்தான் மீதான தனது ஆக்கிரமிப்பை பாக்கிஸ்தான் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்து பலோச்சிஸ்தான் தேசிய இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

பலோச்சிஸ்தானில் பலர் காணாமல் போவதாகவும் போலி என்கவுன்டர்கள் இடம்பெறுவதாகவும் வெளியாகும் ஊடகசெய்திகளிற்கு மத்தியில் பாக்கிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் இவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.

நாட்டில் சட்டபூர்வமான அரசமைப்பின் அடிப்படையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ள போதிலும் மக்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுகின்றனர் போலி என்கவுண்டனர்களில் கொல்லப்படுகின்றனர் என  தகவல்கள் வெளியாகின்றன.

அப்பாவி பலோச்சிஸ்தான் மக்கள் போலி என்கவுண்டர்களில் கொல்லப்படுகின்றனர் பின்னர் அவர்களது உடல்கள் சிதைக்கப்படுகின்றன,தொலைதூர பிரதேசங்களில் மீட்கப்படுகின்றன என ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் இராணுவம் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவநடவடிக்கையொன்றில் கொலை செய்துள்ளது என இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதற்கு முன்னர் வஜிரிஸ்தானில் இடம்பெற்ற நடவடிக்கையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இராணுவம் தெரிவித்திருந்தது.

பாக்கிஸ்தானின் மிகவும வலுவான இராணுவத்தினை கேள்வி கேட்பவர்களையும் தங்கள் தனிப்பட்ட சமூக உரிமைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்களையும்  அச்சுறுத்துவதற்காக வலுக்கட்டாயமாக காணாமல்ஆக்கப்படுதலை பாக்கிஸ்தான் இராணுவம் ஒரு சாதனமாக பயன்படுத்தியுள்ளது.

தொல்லை தருபவர்கள் என கருதுபவர்களை அகற்றுவதற்காக எந்த பிடியாணையே நீதிமன்ற உத்தரவோல இல்லாமல் அரசாங்கம் இந்த குற்றத்தை செய்கின்றது என  மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடத்தப்பட்டவர்கள் முற்றாக காணாமல்போய்விட்டனர் என சர்வதேச மன்னி;ப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசியல் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆசிரியர்கள் மருத்துவர்கள் கவிஞர்கள் சட்டத்தரணிகள்  ஆகியோர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த 20 வருடங்களில் ஆயிரக்கணக்கான  பலோச்சிஸ்தான் மக்கள் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவினராலும் கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பல செயற்பாட்டளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் பலர் பாக்கிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என  அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.

பலோச்சிஸ்தானில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் குற்றவியல் நீதி துறையின உட்பட அதிகாரிகள் இன்னமும் வெளிப்படுத்தவி;ல்லை.

2019 இல் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதலை குற்றமாக்கும் சட்டமூலம் அமைச்சுகளிற்கு இடையி;ல் சிக்குண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47