யாழ் ரத்னா விருது - 2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் கோரல்

Published By: Digital Desk 5

12 Aug, 2022 | 09:25 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு வழங்கப்படுகின்ற விருந்தாகிய யாழ் ரத்னா விருதுக்கு தகுதியாளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை  யாழ்ப்பாண பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாண பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு வழங்கப்படுகின்ற விருந்தாகிய யாழ் ரத்னா விருதுக்கு கவிதை. சிறுகதை. நாவல், நடனம். ஓவியம். சிற்பம். நாடகம், குறும்படத்துறை. இசைநாடகம். இசை (வாய்ப்பாட்டிசை. பண்ணிசை, இசையமைப்பு.) வாத்தியக்கலை (தவில். நாதஸ்வரம். புல்லாங்குழல். மிருதங்கம். வயலின். வீணை, ஓர்கன். ஆர்மோனியம் போன்றன) கூத்து (வடமோடி. தென்மோடி. சிந்துநடை) கிராமியக்கலைகள் (கரகம். காவடி. கும்மி. கோலாட்டம். வசந்தன் கூத்து, வில்லுப்பாட்டு, மொம்மலாட்டம், ஒயிலாட்டம். மகுடி. போன்ற தொடர்புடைய கலைகள்) இசைக்கலை (வாய்ப்பாட்டு. பண்ணிசை. இசையமைப்பு.) ஒப்பனைக்கலை (நாடகங்கள். கூத்துக்கள். நடனக்கலைத்துறைகளுக்கானவை) வாத்தியங்கள் உருவாக்கம் ஆகிய துறைகளில் யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் கலைப்பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தினைக் கொண்ட 60வயது பூர்த்தியடைந்தவர்களும் இதுவரை இவ்விருதினை பெற்றுக்கொள்ளாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப்பிரிவில் பெற்று பூரணப்படுத்திய விண்ணப்பத்துடன் உரிய கலைத்துறையினை சான்றுப்படுத்தும் ஆவணப்பிரதிகளுடன் இம் மாதம் 31 ஆம்  திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு பிரதேச செயலாளரும் கலாசாரப்பேரவையின் தலைவருமான எஸ்.சுதர்சன் கேட்டுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08