எம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது என்பதை எம்மால் சொல்ல இயலாது. அதனால் நோயாளிகளிடம் மருத்துவர்கள் உங்களுக்கான வலி எவ்வளவு என்பதை 0 முதல் 10 என்ற எண்ணிற்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள், வலியை குறித்து, நோயாளி கூறும் எண்ணை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது தான் நோக்கம். 

வலியை மூளைக்கு கடத்தும் நரம்புகளை, துல்லியமாக கண்டறிந்து, வலிகளை கடத்தாமல் இருப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் வலியை உணராமல் கட்டுப்படுத்தி, சிகிச்சையளிக்கிறோம். 

இதற்கு வேதியல் பொருள்கள் மற்றும் ரேடியோ அதிர்வலைகள் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இவற்றில்  முக்கியமானது ரேடியோ ப்ரீகொன்ஸி நியுரோடமி  என்ற சிகிச்சை. இந்த சிகிச்சை, ரேடியோ அதிர்வலைகளைச் செலுத்தி வலியை கட்டுப்படுத்துவதை குறிக்கிறது. 

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இத்தகைய சிகிச்சையை பயன்படுத்தி, வலியை குறைக்கலாம்.

டொக்டர் B. பிரேம் ஆனந்த் M.D.,D A.,DNB.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்