கறுத்துப்போன முகத்துக்கு...

Published By: Devika

12 Aug, 2022 | 12:16 PM
image

1. கடலை மா, கற்றாழை, தயிர் 

ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், ஒன்றரை ஸ்பூன் தயிர் கலந்து ஒரு ஸ்பூன் கற்றாழையும் சேர்க்க வேண்டும். மூன்றையும் நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி காய்ந்த பிறகு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். வாரம் ஓரிரு முறை இதை செய்யுங்கள். 

2. வெள்ளரி சாறு, எலுமிச்சைச் சாறு, ரோஸ் வொட்டர் 

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மேலும் ஒரு ஸ்பூன் ரோஸ் வொட்டர் கலந்து கால், கை, முதுகு, முகத்துக்கு தடவுங்கள். 15 - 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யுங்கள். 

3. தக்காளி, தயிர், எலுமிச்சைச் சாறு 

மிக்ஸியில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அத்தோடு ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, உடலில் கருமை நிறமுள்ள இடங்களில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்யுங்கள், கருமை நீங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்