ரயிலில் மோதுண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 24 பேர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

வருடத்திற்கு 700 பேர் வரையில் ரயிலில் மோதுண்டு உயிரிழக்கின்றனர்.

இதில் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்பவர்களை விட, ரயிலுடன் மோதுண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.