திங்கட்கிழமைக்குள்  வெளியேறுமாறு  பிரித்தானிய யுவதி பீஸருக்கு உத்தரவு

Published By: Digital Desk 4

11 Aug, 2022 | 09:17 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய பெண் கிளீ பீஸரை ( Kayleigh Fraser) எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட் கிழமைக்குள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று 10 ஆம் திகதியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு ஊடாக , வீசா தொடர்பிலான பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஊடாக MED 002918 எனும் அவரது வீசா ரத்து செய்யப்படுவதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான பியூமி பண்டார, கிளீ பீஸரின்  மருத்துவ வதிவிடவீசா எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படுவதாகவும், அதனால் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறினார்.

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய யுவதியான கிளீ பீஸர் தொடர்பில், வீசா விதிமுறைகளை மீறினாரா என்ற கோணத்தில்  குடிவரவு குடியகல்வு திணைக்கலம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

 இதற்காக அவரது கடவுச் சீட்டை  அவர் தங்கியிருந்த இடத்துக்கு  கடந்த 2 ஆம் திகதி சென்ற அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.  தமது இருப்பிடம் வந்த அதிகாரிகளிடம் கிளீ பீஸர், மக்களுக்காக அவர்களது போராட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கதைப்பது தவறா என  கேள்வி எழுப்பியிருந்தார்.

அது குறித்த விசாரணைகளுக்காக 7 நாட்களுக்குள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் ஆஜராகவும் அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதன்படி குறித்த யுவதி  கடந்த 8 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

 அங்கு அவர் குறித்த விசாரணைகள் நடந்துள்ளன. இந் நிலையிலேயே நேற்று 10 ஆம் திகதியிடப்பட்ட அறிவித்தல் ஊடாக வீசா ரத்து செய்யப்படுவதாக  அந்த யுவதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

' ஒருவருக்கு வீசா ஒன்று வழங்கும் போது நிபந்தனையின் அடிப்படையிலேயே அது வழங்கப்படும். அந்த நிபந்தனைகளை மீற முடியாது அல்லவா ' என இது குறித்து தெளிவுவுபடுத்திய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான பியூம்னி பண்டார கூறினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38