கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

Published By: Vishnu

11 Aug, 2022 | 01:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும். எதிர்வரும் காலங்களில் இடம் பெறும் எத்தேர்தல்களிலும் போட்டியிட தயாராகவுள்ளோம்.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதா நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம். எக்காரணிகளுக்காகவும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து முன்னேறி செல்வோம்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும்.

பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் அரசியல் நெருக்கடியினை தோற்றுவித்தது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு தற்போது சர்வக்கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள்.அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் இனிவரும் நாட்களில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளோம்.மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11