பாவனைக்கு உதவாத 35,000 கிலோ மீன்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

11 Aug, 2022 | 02:33 PM
image

(எம்.மனோசித்ரா)

பாவனைக்கு உதவாத தரமற்ற மீன் தொகையுடன் சந்தேகநபர்கள் மூவர் களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று புதன்கிழமை களனி குற்ற விசாரணைப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சீதுவ மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றி வளைப்புக்களின் போதே குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து 35,100 கிலோ கிராம் பாவனைக்குதவாத மீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39, 47 மற்றும் 49 வயதுகளையுடைய நீர்கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு , இதன் போது சீதுவ பொலிஸ் பிரிவில் முதுவாடிய பிரதேசத்தில் பாவனைக்குதவாத 5,400 கிலோ மீன் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் பக்கியாவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பாவனைக்குதவாத 29,700 கிலோ கிராம் மீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதோடு , பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27