ஆபாசமான படங்களை அனுப்புவதற்கு சிறுமிகளை நிர்ப்பந்தித்த இளைஞன் குற்றவாளி என நீதிமன்றத்தில் ஒப்புதல்

Published By: Vishnu

11 Aug, 2022 | 12:59 PM
image

ஆபா­ச­மான படங்­களைப் பிடித்து தனக்கு அனுப்­பு­வ­தற்கு சிறு­மி­களை நிர்ப்­பந்­தித்­தாக பிரிட்­டனைச் சேர்ந்த ஒரு நபர் ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

இங்­கி­லாந்தின்  மேற்கு சசெக்ஸ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜோர்டான் க்ரொப்ட் எனும் 26 வய­தான இந்த இளைஞன் சுமார் ஒரு டஸன் சிறு­மி­களை நிர்ப்­பந்­தித்­த­தாக குற்­றம்­சு­மத்­தப்­பப்­பட்­டது.

இதற்­காக பல்­வேறு சமூக வலைத்­த­ளங்­களில் 20 கணக்­கு­களை இவர் ஆரம்­பித்­தி­ருந்தார் எனவும் 12 வய­தான சிறு­மி­க­ளையும் இவர் தனது பாலியல் அடி­மை­யாக இருப்­ப­தற்கு முயற்­சித்தார் எனவும் அதி­கா­ரிகள் குற்­றம்­சு­மத்­தினர். 

 ஒரு சமூ­க­வ­லைத்­த­ளத்தில் மாத்­திரம் 5,000 இற்கு அதி­க­மா­னோரை இவர் தொடர்­பு­கொண்­டி­ருந்தார் எனவும், தான் கூறு­வ­தன்­படி செயற்­ப­டா­விட்டால், அவர்­களின் படங்­களை அவர்­களின் குடும்­பத்­தினர் மற்றும் சமூக வலைத்­த­ளங்­களில் அவர்­களை பின்­தொ­டர்­ப­வர்­க­ளுக்கு அனுப்பப் போவ­தாக அச்­சு­றுத்­தினார் எனவும் லூவிஸ் கிறவுண் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

தன்னை பதின்ம வயது சிறு­வ­னாக அறி­மு­கப்­ப­டுத்திக் கொள்ளும் இந்­நபர், பின்னர் தனது உத்­த­ர­வு­களை பின்­பற்­றுவர் தான் கரு­து­ப­வர்­களிடம் தனது உண்­மை­யான வயதை தெரி­விப்­பாராம்

கணினிப் பாது­காப்புத் துறையில் தான் பட்டம் பெற்­றுள்­ள­தா­கவும், தன்னை அதி­கா­ரிகள் அடை­யாளம் காண முடி­யாது எனவும் தான் இலக்கு வைத்­த­வர்­க­ளிடம் ஜோர்டான் க்ரொப்ட் கூறி­யுள்ளார்.

பிரிட்­ட­னின் தேசிய குற்­ற­வி­யல் முக­ர­கத்தின் (என்.சி.ஏ) சிரேஷ்ட புல­னாய்வு அதி­காரி மார்ட்டின் லுட்லோக் இது தொடர்­பாக கூறு­கையில், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் அவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும் இதயம் நொறுக்கும் துன்­பங்­களை ஜோர்டான் க்ரொப்ட் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார் என்றார்.  

“ஜோர்டான் க்ரொப்ட்டின் செயற்­பா­டு­களை நிறுத்­து­மாறு மன்­றா­டிய சிறு­மி­க­ளுக்கும் அவர் கருணை காட்­ட­வில்லை. 

அவ­ருக்கு எதி­ராக துணிச்­ச­லுடன் பேச முன்­வந்த இளம் பெண்­களை நான் பாராட்­டு­கிறேன்.

சிறார்­களை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­து­வ­தற்கு இணை­யத்தில் அநா­ம­தே­ய­மாக ஒளிந்­து­கொள்ள முடியும் என நம்­பு­ப­வர்கள் உட்­பட பார­தூ­ர­மான குற்­ற­வா­ளி­களை தேசிய குற்­ற­வியல் முக­வ­ரகம் தொடர்ந்தும் பின்­தொ­டரும். 

க்ரொப்ட் போன்­ற­வர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள்” எனவும் மார்ட்டின் லுட்லோக் கூறினார்.

பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் தொடர் பில் 2019 ஆம் அண்டு ஜோர்டான் க்ரொட் கைது செய்யப்பட்டிருந்தார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அனுப் பியிருந்த ஆபாசமான படங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அவருக்கான தண்டனை எதிர்வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right