கொட்டாஞ்சேனையில் வர்த்தகர் வீட்டில் கொள்ளை : கைதான வர்த்தகரின் மனைவியின் நண்பிகளான இரு பெண்களுக்கு பிணை : இருவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

11 Aug, 2022 | 06:46 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனை - சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் அத்து மீறி கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட பணம், நகைகளை ஆயுத முனையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது  செய்யப்பட்ட நால்வரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் பொலிஸார் சந்தேக நபர்களை புதன்கிழமை ( 10) ஆஜர் செய்த போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக கூறப்படும் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், இக்கொள்ளையை திட்டமிட்டதாக பொலிஸ் தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட  இரு பெண்களையும் நீதிமன்றம் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை - சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என அடையாளப் படுத்திக்கொண்டு நுழைந்தோரால் சுமார் இரண்டரை கோடி ரூபா வரை பெறுமதி மிக்க தங்க நகைகள், பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  கடந்த 8 ஆம் திகதி  முற்பகல் 11.10 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப் பெற்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 விசாரணைகளின் படி,  செவ்வாய்க்கிழமை ( 9) பாலத்துறை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட நால்வரை கொட்டாஞ்சேனை பொலிசார் கைது செய்தனர்.

 கார் ஒன்றில் வந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தாப்பிச் சென்றுள்ளதாக கூறிய பொலிசார் அறிவியல் தடயங்களை வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

 இதன்போது கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகையின் ஒரு பகுதியை பொலிசார் மீட்டிருந்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரான வர்த்தகரின் மனைவியின் நண்பிகளும் அவர்களுக்கு நெருக்கமான இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை தொடர்பிலான திட்டம்  வர்த்தகரின் மனைவியின் நண்பிகளுடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில்,  கொள்ளையிடப்பட்ட வர்த்தகர் உண்டியல் பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையவர் என்பதால், கொள்ளை தொடர்பில் அவர் பொலிசில் முறையிடமாட்டார் என கொள்ளையர்கள் நம்பியதாக விசாரணைகளில் வெளிப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறான பின்னணியிலேயே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08