2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான  ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.