பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

தான் ஜப்பானில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றிற்கும், இந்தியாவில் இடம்பெறவுள்ள திருமண வைபவம் ஒன்றிற்கும் செல்லவுள்ளதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றதில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீதிமன்றம் இந்த அனுமதியை இன்று வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட உதய கம்மன்பிலவின், கடவுச் சீட்டு கடுவல நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.