தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரின் இன்­றைய போட்­டியில் இலங்கை அணி இந்­தி­யாவை எதிர்­கொள்­கி­றது. கேரள மாநில திரு­வ­னந்­த­பு­ரத்தில் நடை­பெற்று வரும் தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை அணியும் நேபா­ளமும் மோதி­யி­ருந்தன. இந்­தப்­போட்­டியில் இலங்கை 1-–0 என்ற கோல் கணக்கில் நேபா­ளத்தை வீழ்த்தி வெற்­றி­வாகை சூடிக்­கொண்­டது.

இந்­நி­லையில் ஏ பிரிவில் இடம்­பெற்­றுள்ள இந்­தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மாலை 6.30 மணிக்கு பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இந்தப் போட்டி குறித்து இலங்கை அணியின் பயிற்­சி­யாளர் கருத்து தெரி­விக்­கையில், நேபா­ளத்­து­ட­னான போட்­டியில் எமக்கு சிறந்த பலன் கிடைத்­தி­ருக்­கி­றது. அதேபோல் எமது வீரர்கள் சிறப்­பாக செயற்­பட்­டனர். எமது தடுப்­பாட்டம் மிகவும் சிறந்­த­தாக அமைந்­தது. இன்­றைய போட்டியில் நாம் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். இந்திய அணிக்கு

நிகராக எமது அணியும் செயற்படும் என்றார்.

இதேவேளை இன்றைய போட்டி

யில் இலங்கை எதிர்கொள்ளவிருக் கும் இந்தியா தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப்பில் 6 முறை சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்ததென்பது குறிப்பிடத்தக்கது.