பகல் தூக்கம் நல்லதா..?

Published By: Digital Desk 5

10 Aug, 2022 | 10:26 AM
image

எம்மில் பலரும் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ இருக்கும்போது மதிய உணவை உண்ட பிறகு சோர்வின் காரணமாக தூங்குகிறார்கள். அவர்களது இந்த பகல் தூக்கம் ஆரோக்கியமானதா..? எனக் கேட்டால், மருத்துவ நிபுணர்கள், 'இல்லை' என பதிலளிக்கிறார்கள்.

துவாக எம்மில் பலரும் காலை உணவை தவிர்ப்பவர்களாகவோ அல்லது முழுமையான அளவிற்கு காலை உணவை சாப்பிடாதவராகவோ இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானார் மதியம் தயிர் சாதம் அல்லது அளவுக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்கிறார்கள். 

இதன் காரணமாக அவர்களுக்கு சாப்பிட்டவுடன் அசதி உண்டாகிறது. காலையிலிருந்து தொடர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் சோர்வும் உடன் சேர்ந்து கொள்ள, சிறிது நேரம் உறங்கினால் தான் சுறுசுறுப்பு கிடைக்கும் என்ற மனநிலைக்கு ஆளாகி, உறங்க தொடங்குகிறார்கள். 

தொடக்கத்தில் 30 நிமிட கால அளவிற்கு உறங்கி எழுந்து, மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்றும் இவர்கள், நாளடைவில் பகலில் ஒரு மணி தியாலம் முதல் நான்கு மணித் தியாலம் வரை உறங்குகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. 

குறிப்பாக பகல் தூக்கம், அவர்களை விரைவில் நெடுநேரம் விழித்திருக்க வைக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடல் சுழற்சி கடிகாரத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஹோர்மோன் உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மை உண்டாகிறது. அத்துடன் நீரிழிவு,  குருதி அழுத்த பாதிப்பு போன்ற நோய்களுக்கும் ஆளாகிறார்கள். வேறு சிலர் இதன் காரணமாக உறக்கமின்மை நோய், புற்றுநோய், இதய நோய் போன்ற சில ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

பகலில் தூங்குவதை தவிர்க்க மருத்துவர்கள் இரண்டு வகையினதான ஆலோசனைகளை பரிந்துரைக்கிறார்கள். காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக்கொண்டு, மதிய உணவின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மதிய உணவாக காய்கறிகளையும், பழங்களையும் மட்டும் சாப்பிடும் உணவு முறைக்கு மாற வேண்டும். 

இதன் காரணமாக பகலில் தூக்கம் வருவது தவிர்க்கப்படும். வேறு சிலருக்கு பகலில் உறங்கினால் தான் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலும் என்ற மனநிலைக்கு அடிமையாகி இருந்தால், 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை மட்டுமே உறங்குவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு உபாயங்களையும் கடைப்பிடித்தால் பகலில் உறங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்கலாம்.

டொக்டர் அனந்த கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04