ஏன் இந்த நிலைமை? 

Published By: Digital Desk 4

10 Aug, 2022 | 06:58 AM
image

சி.சிவகுமாரன்

மழைக்காலங்களில்  தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது சகஜமான ஒன்று. ஆனால் உயர்நிலமான  மத்திய மலைநாட்டில் ஏன் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது? இந்த கேள்வி இங்குள்ள பலருக்கே எழுந்தாலும் அதற்கு விடை தேடும் அளவுக்கு அக்கறையில்லாதவர்களாகவும் கேள்வி எழுப்ப கூடிய அளவுக்கு தைரியமில்லாதவர்களாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் தமது குடியிருப்புகளுக்கு வெள்ள நீரை இவர்கள் வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர். 

இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் ஒருவித அலட்சியப்போக்கு நிலவுவதையும் அவதானிக்க முடிகின்றது. முக்கியமாக மலையகத்தின் பிரதான நகரங்களில் மழை நீர் வடிந்து செல்லுமளவுக்கு வடிகாண்களை கொண்ட நகரங்கள் எங்குமே இல்லை. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தைக் கூறலாம். இங்குள்ள உள்ளூராட்சி சபைகள் கடந்த காலங்களில் தமது நகர அபிவிருத்தியை கருத்திற்கொண்டு செயற்பட்டதில்லை.

மிக முக்கியமாக வெள்ளையர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட வடிகாண் அமைப்புகளே இன்றும் உள்ளன. அக்காலத்தில் இவ்வாறான காலநிலை மாற்றங்களோ அல்லது கடும் மழை வீழ்ச்சி காலநிலைகளோ நிலவவில்லை. மட்டுமின்றி நகரமயமாக்கம் தற்போதுள்ள அளவில் இல்லை. மிகக்குறைந்தளவான கட்டிடங்களும் குடியிருப்புகளுமே நகரங்களில் காணப்பட்டன. ஆதலால் அதற்கேற்ற வகையிலேயே நகரங்களில் வடிகாண் அமைப்புகளும் காணப்பட்டன. நாட் செல்ல செல்ல சனத்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கத்தின் விளைவாக குடியிருப்புகள் கட்டிடங்கள் பெருகப் பெருகஇ நகரங்களின் உட்கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஒரு சில நகரங்களில் வடிகாண்களை மறைத்து அல்லது அதற்கு மேலாகவே சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சில உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறை காட்டுவதில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. அதாவது உள்ளூராட்சி நிறுவனங்களிலிருந்து முறைப்பாடுகள் எழுத்துமூலமாக வந்தால் மட்டுமே அது குறித்து அக்கறை செலுத்துவனவாக உள்ளன.

இந்நிலையில் நகரப்பகுதிகளிலுள்ள வடிகாண்களை அகலப்படுத்தும் செயற்பாடுகளில் அதிகாரத்தை கொண்டிருக்கும் நிறுவனமாக வீதி அபிவிருத்தி அதிகார சபை விளங்குகின்றது. பிரதான வீதிகளில்  தமது எல்லைகளை மஞ்சள் நிற  கற்களினால் அடையாளப்படுத்திச் செல்லும் வீதி அபிவிருத்தி அதிகார சபையானதுஇ வடிகாண்களை அகலப்படுத்தும் செயற்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை.

இதை உள்ளூராட்சி நிறுவனங்களே பார்த்துக்கொள்ளட்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால் நகரங்களையடுத்து உள்ள கிராமங்கள்இ குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் மற்றும் வடிகாண்களை துப்புரவு செய்வது அல்லது புனரமைக்கும் அதிகாரமே தமக்குள்ளதாக உள்ளூராட்சி சபைகள் கூறுகின்றன. அவையும் முறையாக செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகளும் தற்போது எழுகின்றன. 

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அட்டன் நகரத்தில் சில வருடங்களுக்கு முன்பு பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு வடிகாணில் பெருமளவு வெள்ள நீர் சென்றதால் ஒரு பாடசாலை சிறுமி அடித்துச்செல்லப்பட்டு பலியானார். அந்த வடிகாண் சென்று முடியும் இடத்தில் அதாவது கிட்டத்தட்ட 4  கிலோ மீற்றர் தொலைவில் அந்த சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு பிரதான நகரத்தின் பிரதான வீதியில் இடம்பெற்ற அவலம் இது. 

இதே போன்ற பல சம்பவங்களை உதாரணத்துக்குக் கூறலாம். தொடர்ச்சியான மழை பெய்தால் அட்டன் உட்பட நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்கள் வெள்ள நீரினால் நிரம்பிக் காணப்படுகின்றன. அனைவரும் பிரதேச இ நகர இமாநகரசபைகளை நோக்கி கைகளை நீட்டுகின்றனர். ஆனால் இவ்வாறு வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக இருந்த இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டிடங்களை அமைத்துள்ள தனிநபர்கள்இ வர்த்தகர்கள் இஅரசியல்வாதிகள் மீது எவரும் தமது கவனத்தை திருப்புவதில்லை. அப்படியானால் அவ்வாறான கட்டிடங்களை அமைப்புதற்கு அனுமதி கொடுத்தது யார்? மேற்படி உள்ளூராட்சி  அமைப்புகளை கேட்டால் கடந்த கால நிர்வாகங்களின்  மீது கைகளை காட்டி விட்டு மெளனிக்கின்றன. அல்லது எழுத்து மூலமான முறைப்பாடு தமக்குக் கிடைக்கவில்லையென்கின்றனர். 

சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரக்ஞையும் இன்றி செயற்படும் பொது மக்களும் இதற்குக் காரணகர்த்தாக்களாக உள்ளனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கில்லை. இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்களை எடுத்துக்கொள்வோம். சட்டவிரோத கட்டிடங்கள் இ குடியிருப்புகள் இல்லாத ஏதாவது ஒரு நகரத்தை உள்ளூராட்சி சபைகளால்  சுட்டிக்காட்ட முடியுமா?  சில இடங்களில் சட்டவிரோத கட்டிடங்களை அமைப்பவர்கள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் இஉறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர். அப்படியானால் சாதாரண பொது மக்களை நோக்கி அவர்கள் எங்ஙனம் கைகளை நீட்ட முடியும்? 

கடல் மட்டத்திலிருந்து 1868 அடி உயரத்தில் நுவரெலியா நகரம் உள்ளது. 1271 அடி உயரத்தில் அட்டன் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிகளில்  மழை வெள்ளம் பிரதான வீதிகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் காட்சிஇ ஏனையோருக்கு ஆச்சரியத்தையே வரவழைத்துள்ளது. இந்த அடிப்படை உட்கட்டமைப்பு விடயத்தில் கூட உரிய தரப்பினர் எந்தளவுக்கு அலட்சியமாக கடந்த காலங்களில் இருந்திருக்கின்றனர் என்பதோடு தற்போது அதிகாரத்திலிருப்பவர்கள் இதற்கு என்ன முயற்சிகளை முன்னெடுத்தனர் என்ற கேள்வியும் எழுகின்றது. 

ஆனால் மழை விட்டதும் அனைவருமே பழையதை மறந்து விட்டு தமது புதிய அலுவல்களை செய்வதற்கு புறப்பட்டு விடுவர் என்பதையும் இங்கு கூற வேண்டியுள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் இங்கு ஆட்சியாளர்களை மாத்திரம் குறை கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சில சம்பவங்களுக்கு பொது மக்களும் காரணகர்த்தாக்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும் ஏனென்றால் ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்களும் இவர்கள் தானே ! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04