பாராளுமன்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை எங்கே ? - எதிர்க்கட்சி சபையில் கேள்வி

Published By: Vishnu

09 Aug, 2022 | 09:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் எங்கே என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபையில் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றம் 09 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்த தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஆளும் கட்சி உறுப்பினர்களான வசந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் திலக் ராஜபக்ஷ் ஆகியோர் வரப்பிரசாதம் மீறப்பட்டமை தொடர்பில் சபையில் முறைப்பாடு தெரிவித்தினர். 

இதன்போது, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாங்கள் அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

இதன் காரணமாக எங்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தன. அதேபோன்று எமது கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மோசமான வார்த்தைகளால் எங்களை தொலைபேசியில் திட்டியிருந்தனர் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த உறுப்பினர்களின் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார். இதற்கு நாங்களும் பொறுப்புக் கூறவேண்டும்.

ஏனெனில் கடந்த காலத்தில் எமது கட்சியைச்சேர்ந்த,  தற்போது அமைச்சராக இருக்கும் மனுஷ நாணயக்காரவுக்கு  அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்ற வளாகத்துக்குள் அச்சுறுத்தி தாக்குவதற்கு முற்பட்டிருந்தார். 

இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.  என்றாலும் அந்த குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என தெரியாது. அன்று நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அதனால் விசாரணைக்குழு அறிக்கையின் தீர்மானம் என்ன என்பதை சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து விளக்கமளித்த  ஹர்ஷ டி சில்வா, கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்தவர்களை தேடி, கைதுசெய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

ஆனால் இந்த சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, சபாநாயகர் ஆசனத்தை சேதப்படுத்தியமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவின் அறிக்கை எங்கே? ஏன் அந்த அறிக்கைகளை மறைக்கின்றீர்கள்.? இவ்வாறு சென்றால் இன்னும் பல பயங்கரமான நிலைமைகளுக்கு உள்ளாக நேரிடும் மேலும் சமிந்த விஜேசிறி குறிப்பிடுகையில்,  திருநடேசன் என்ற ஒருவர் தொலைபேசியில் என்னை அச்சுறுத்தி இருந்தமை தொடர்பாக நானும் முறைப்பாடு செய்திருந்தேன்.

ஆனால் இதுதொடர்பாக தேடிப்பார்ப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. எங்கு தேடுகிறீர்கள் என்று  கேட்கின்றேன். எனது முறைப்பாடு தொடர்பில் என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ எந்த வாக்குமூலமும் பெறப்படவில்லை.

 தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் நீதியாக இடம்பெற்றதா என்ற சந்தேகம் நிலவுகின்றது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்திலுக்கு அஞ்சியே வாக்களித்துள்ளனர். அப்படியானால் நியமிக்கப்பட்டிருப்பது சட்ட ரீதியிலான ஜனாதிபதி ஒருவர் அல்ல. அதனால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை சட்ட ரீதியானதா என்பதை  சபாநாயகர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14